U19 World Cup : ஆஸ்திரேலியா என்றாலே பயம்.. 27 ஐசிசி தொடர்களில் வெற்றி.. இந்தியாவை பொளந்த கங்காருஸ்!
மும்பை : கடைசி 10 ஆண்டுகளில் ஆடவர், மகளிர், யு19 என்று 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி 3 முறை மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக யு19 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை, முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்திய அணி 3வது முறையாக ஐசிசி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது தெரிய வந்தது. எப்படி உலகக்கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று இறுதிப்போட்டியில் சென்று தோல்வியடைந்ததோ, அதேபோல் யு19 உலகக்கோப்பை தொடரிலும் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பலரும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சர்வதேச ஐசிசி தொடரில் ஆஸ்திரேலியா அணி தரப்பில் வெல்லப்படும் 27வது கோப்பை இதுவாகும். ஆடவர் அணி தரப்பில் 6 ஒருநாள் உலகக்கோப்பை, 2 சாம்பியன்ஸ் டிராபி, ஒரு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் 4 யு19 உலகக்கோப்பை தொடர் வெல்லப்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் அணி தரப்பில் 7 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் 6 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் என்று 27 ஐசிசி கோப்பைகள் வெல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை ஐசிசி தொடரில் வீழ்த்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. அதேபோல் 2017ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி, 2018ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்றுள்ளது. மீதமுள்ள 7 ஐசிசி தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணியே வென்றுள்ளது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications