Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Memes : பைனலில் எங்களை அடிக்கிறதே பொழப்பா போச்சு.. இந்திய அணியை வெளுக்கும் ரசிகர்கள்.. தெறி மீம்ஸ்!

பெனோனி : யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா அணி தோல்வியடைந்த பின் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

U19 World Cup : Fantastic Memes from Social Media after India lost by 79 runs against Australia in the U19 World Cup Final

தில்லாலங்கடி படத்தில் ஷ்யாமிடம் நடிகர் வடிவேலு, நான் நேரடியாக பேச விரும்பலை. சுத்தி வளைச்சு பேசுறேன்.. அவன் உன் கண் முன்னாடியே இருப்பான்.. ஆனாலும் உன்னால் பிடிக்க முடியாது என்பார். அதனை மாற்றி, "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை மற்றும் யு19 உலகக்கோப்பை என்று ஓராண்டில் மூன்றிலும் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்திவிட்டது. ஏய்.. ஆஸிஸ்.. பைனல்ல எங்களை அடிக்கிறதே உனக்கு புழப்பா போச்சா!.. நேரடியாக பேசலை.. சுத்தி வளைச்சு பேசுறேன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

U19 World Cup : Fantastic Memes from Social Media after India lost by 79 runs against Australia in the U19 World Cup Final

உத்தமபுத்திரன் படத்தில் ஜெயபிரகாஷ் ரெட்டி மற்றும் அவரின் பேராக நடித்த பரத் இருவரையும் மருமகளாக இருக்கும் சுரேகா வாணி, தாத்தானை போலவே பேரன்.. கொஞ்சம் கூட அறிவே இல்லை என்று திட்டுவார். அதனை மாற்றி, ஜெயபிரகாஷ் ரெட்டியை இந்திய சீனியர் அணியாகவும், பரத்தை யு19 இந்திய அணியாகவும் பாவித்து சுரேகா வாணியை போல் ரசிகர்கள் திட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

U19 World Cup : Fantastic Memes from Social Media after India lost by 79 runs against Australia in the U19 World Cup Final

தொடர்ந்து 3வது முறையாக ஐசிசி தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. 9 மாதங்களில் இது 3வது முறையாகும். இதனை பத்து தல படத்தில் சிலம்பரசன், ஏஜிஆர்-க்கு துரோகம் என்ன புதுசா என்று கேட்பார். அதுபோல் இந்திய அணி ரசிகர்கள், ஏமாற்றம் நமக்கு புதுசா என்ன? என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ரசிகளின் மனசாட்சி.

U19 World Cup : Fantastic Memes from Social Media after India lost by 79 runs against Australia in the U19 World Cup Final

லியோ படத்தில் நடிகர் விஜய் நண்பராக வரும் ராமகிருஷ்ணன் அவரது ரெஸ்டாரண்ட் வாசலிலேயே கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்படுவார். அப்போது அங்கு செல்லும் விஜய், "அவர் என் நண்பர் இல்லை. அவர் என் நண்பராக இருந்தால் என் கண் கலங்கி இருக்க வேண்டுமெல்லவா.. கலங்கி இருக்கா பாருங்க" என்று கேட்பார். அதுபோல் 3 ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்திய அணியை பார்த்து ரசிகர்கள், "குறைந்தபட்சம் ஒரு ரசிகன் அப்படின்ற முறையில், என் கண் கலங்கி இருக்கணும்ல.. கலங்கி இருக்கா பாருங்க" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெளியே சிரிக்கிறேன்.. உள்ளே அழுகுறேன் ரகம்.

U19 World Cup : Fantastic Memes from Social Media after India lost by 79 runs against Australia in the U19 World Cup Final

9 மாதங்களில் 3வது ஐசிசி உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணியிடம் தாரை வார்த்துள்ளது இந்திய அணி. இதனை தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடிகர் விஷால், "வாழ்க்கைல நிறைய தோல்வியை பார்த்துட்டோம்.. அதனால் தோல்வி ஒன்னும் எனக்கு புதுசு இல்லை" என்று சொல்வார். அதனை இந்திய அணிக்கு மாற்றி, லைஃப்ல நிறைய ஃபைனலில் தோல்வியை பார்த்துட்டோம்.. அதனால தோல்வி எங்களுக்கு புதுசு இல்லை என்று கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ சாமி முடியலைடா ரகம்.

Story first published: Monday, February 12, 2024, 8:36 [IST]
Other articles published on Feb 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+