Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வம்சாவளி வீரரோட ஆட்டம் கிளாஸிக் .. குறைந்தது 4 பேராவது பெருசா வருவோம்.. ஆஸி. கேப்டன் உறுதி!

பெனோனி: யு19 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக 4 பேராவது மிகப்பெரிய இடத்தை எட்டுவோம் என்று அந்த அணியின் கேப்டன் ஹூக் வெய்ப்கென் தெரிவித்துள்ளார்.

யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் வெய்ப்கென் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை சேர்த்தது.

U19 World Cup : Harjas Singh is a quality player and always his class is permanent says Australia Captain Hugh Weibgen

ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 55 ரன்களை விளாசினார். அதேபோல் கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களும், ஆலிவர் பீக் 43 பந்துகளில் 46 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஹூக் வெய்ப்கென் பேசுகையில், எங்கள் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நினைத்து பெருமையாக உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் முதல் பேட்டிங் செய்வதில் ஆர்வமாக இருந்தனர்.

கொஞ்சம் நல்ல ஸ்கோரை பேட்டிங் மூலம் எடுத்துவிட்டு, பவுலிங் செய்யலாம் என்று திட்டமாகவும் இருந்தது. ஹர்ஜாஸ் சிங் எப்போதும் தரமான வீரர். அவரின் ஆட்டத்தில் கிளாஸ் மட்டும் நிரந்தரம் என்று சொல்லலாம். அவர் நிச்சயம் விளையாட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த பயிற்சியாளர்களுக்கு தான் பாராட்டுகள் செல்ல வேண்டும். இந்திய அணி எப்போதுமே சிறந்த அணி தான். இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இன்றைய நாளில் தவறான இடத்தில் உள்ளார்கள்.

இந்த ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் பலரும் நிச்சயம் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்கள் கூடுதலாக செல்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு அணியாக எங்கள் அனைவருக்கும் எங்களது பணி என்ன என்பது தெரியும். குறைந்தது 4 வீரர்களாவது இந்த அணியில் இருந்து உச்சத்திற்கு செல்லவில்லை என்றால், எனக்கு அது ஆச்சரியம் தான் என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, February 11, 2024, 21:55 [IST]
Other articles published on Feb 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+