Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விராட் கோலி தந்த அட்வைஸ் என்ன?” U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இந்திய கேப்டன் யாஷ் துல் பெருமிதம்

வெஸ்ட் இண்டீஸ்: விராட் கோலி சொன்ன ஒரு வார்த்தை பெரும் நம்பிக்கை கொடுத்திருப்பதாக U19 இந்திய அணிக் கேப்டன் யாஷ் துல் கூறியுள்ளார்.

Recommended Video

Kohli Interacts With India's U19 Team Ahead of Final against England | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை தொடங்கவுள்ளது.

இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முணைப்பு காட்டி வருகிறது.

கோலியின் அட்வைஸ்

கோலியின் அட்வைஸ்

இந்திய அணியில் முக்கிய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அந்தவகையில் 2008ல் U 19 உலகக்கோப்பை தொடரை வென்றுக்கொடுத்த கேப்டன் விராட் கோலி நேற்று வீடியோ கால் மூலம் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

விராட் என்ன கூறினார்

விராட் என்ன கூறினார்

இந்நிலையில் விராட் கோலி என்னக்கூறினார் என்பது குறித்து கேப்டன் யாஷ் துல் பேசியுள்ளார். அதில், முக்கியமான போட்டியில் எப்படி அணியின் திட்டத்தை சரியாக செயல்படுத்துவது என்பதை விராட் கோலி நிதானமாக விளக்கினார். அவர் கூறிய வார்த்தைகள் எங்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒரு சீனியர் வீரர் இதுபோன்று எங்களுக்காக பேசுவது நம்பிக்கையை தந்துள்ளது. ஆட்டத்தின் அடிப்படை என்பதை புரிந்துக்கொண்டுள்ளோம் எனக்கூறியுள்ளார்.

அணி வியூகம் என்ன

அணி வியூகம் என்ன

தொடர்ந்து ஆட்டம் குறித்து பேசிய யாஷ் துல், இறுதிப்போடிக்காக எங்களுக்கென தனி வியூகத்தை அமைத்துள்ளோம். இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானுடன் மிகவும் கடுமையாக போராடி வந்துள்ளது. அதனை நன்கு கவனித்துள்ளோம். எனவே எங்களின் திட்டம் மூலம் இங்கிலாந்தை சிறப்பான முறையில் வீழ்த்துவோம் என யாஷ்துல் கூறியுள்ளார்.

எப்படி பார்ப்பது?

எப்படி பார்ப்பது?

இரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 ஹெச்.டி ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரடியாக காணலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்குறித்த அப்டேட்கள் மற்றும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மைக்கேல் தமிழ் வலைதளப்பக்கத்திலும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

Story first published: Saturday, February 5, 2022, 18:24 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+