Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சரித்திரத்தில் எழுதுங்கள்” U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இந்திய அணிக்காக சச்சின் தந்த நம்பிக்கை!

வெஸ்ட் இண்டீஸ்: U 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர்களுக்கு சச்சின் மற்றும் விராட் கோலி சில டிப்ஸ்களுடன் கூடிய வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள வி.வி.ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

இறுதிப்போட்டியில் இந்தியா

இறுதிப்போட்டியில் இந்தியா

இதுவரை 4 முறை U 19 உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணி 5வது முறையாக வெற்றி பெற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மற்றொருபுறம் 1998க்கு பிறகு ( 24 ஆண்டுகள் காத்திருப்பு) இங்கிலாந்து அணி தனது 2வது கோப்பையை வென்றே தீர வேண்டும் என முனைப்பு காட்டுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சச்சினின் அட்வைஸ்

சச்சினின் அட்வைஸ்

இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி அட்வைஸ் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சச்சின், கடும் சிரமங்களுக்கு இடையே நீங்கள் இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளீர்கள். அணியில் சிலருக்கு கொரோனா உறுதியானதால் விளையாட முடியாததை நான் அறிவேன். சாம்பியன்ஸ்களுக்கு சிறந்ததை வைத்து தான் வெற்றி பெற வேண்டும் என்று அல்ல, தங்களிடம் இருப்பதை சிறந்ததாக மாற்றி வெற்றி பெறுவார்கள். இது தான் நீங்கள் காத்துக்கொண்ட இருந்த அந்த நேரம், திறமையை காட்டுங்கள்" என சச்சின் கூறியுள்ளார்.

அழுத்தத்தை சமாளியுங்கள்

அழுத்தத்தை சமாளியுங்கள்

மேலும் இறுதிப்போட்டி அழுத்தத்தை சமாளிக்கவும் சச்சின் டிப்ஸ் கொடுத்துள்ளார். அதில், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதியின் போது அணிக்குள் ஆலோசனை எப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என விவாதித்தோம். அப்போது தான், கோடிக்கணக்கான ரசிகர்கள் எங்களுக்கு அருகில் பக்க பலமாய் உள்ளனர். எங்கள் தலையின் மீது அமர்ந்து அழுத்தம் கொடுக்கவில்லை என்பது புரிந்தது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உந்தி முன் செல்வதற்காக பயன்படுத்துங்கள் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Recommended Video

IND vs WI 1st ODI | Sachin Record ஐ முறியடிக்கப்போகும் Rohit Sharma | Oneindia Tamil
கோலி வாழ்த்து

கோலி வாழ்த்து

இதே போல 2008ல் U19 உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த விராட் கோலி ஏற்கனவே வீடியோ கால் மூலம் இந்திய அணிக்கு அட்வைஸ் கூறியிருந்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு வாருங்கள் என வாழ்த்து கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 5, 2022, 18:37 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+