அடுத்த யுவி இவர்தான்! அட தல தோனியும் கிடைச்சிட்டாரு!போட்டுத்தாக்கும் பேன்ஸ்.. இது லிஸ்ட்லேயே இல்லையே
ஆண்டிகுவா: U19 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் தோனி - யுவராஜ் சிங் ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பையை 5வது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 189 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் 2 சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்திருந்தன.

முதல் சம்பவம்
இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் ஆல்ரவுண்டர் ராஜ் பவா. அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்தின் மிடில் ஆர்டரை ஆட்டம் காண வைத்தார். இதே போல பேட்டிங்கிலும் 35 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

ராஜ் பவாவின் சாதனை
இதன் மூலம் U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதே போல ஒரே ஐசிசி தொடரில் 150+ ரன்கள் மற்றும் ஃபைபர் ( ஒரே போட்டியில் 5 விக்கெட்கள்) எடுத்த 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவில் கபில் தேவ் மட்டுமே செய்துள்ளார்.

தினேஹ் பானா சிக்ஸர்
மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சிங்கிள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருந்த போது, விக்கெட் கீப்பர் தினேஷ் பானா தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்தார். அவரின் இந்த ஃபினிஷிங் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ரசிகர்கள் திடீர் சண்டை
இந்நிலையில் இந்த இரண்டையும் வைத்து தான் தற்போது சண்டை கிளம்பியுள்ளது. அதாவது ராஜ் பவா வலதுகையில் பவுலிங் போட்டாலும், இடது கையில் பேட்டிங் செய்பவர். இவரின் பேட்டிங் ஸ்டைல் அப்படியே யுவராஜ் சிங்கை நியாபகப்படுத்தியதை போன்று இருந்தது. 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச்செல்ல முக்கியமாக இருந்தவர் யுவராஜ் சிங். 9 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அவரைப்போன்றே ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்செல்ல மற்றொரு யுவராஜ் சிங்கை பாருங்கள் எனக்கூறி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video

சண்டையிடும் ரசிகர்கள்
மற்றொரு புறம் தினேஷ் பானா சிக்ஸர் மூலம் உலகக்கோப்பையை வென்றதை வைத்து, மற்றொரு தோனி கிடைத்துவிட்டார் பாருங்கள் என தோனியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் யார் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க இரு வீரர்களின் ரசிகர்களும் மோசமாக விமர்சித்துக்கொண்டும் உள்ளனர். எது எப்படி இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டிற்கு 2 சிறந்த வீரர்கள் கிடைத்துவிட்டனர் என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications