Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி தந்த அட்வைஸ்.. U19 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணம்.. யாஷ் துல் தந்த சுவாரஸ்ய பதில்

ஆண்டிகுவா: விராட் கோலி கூறிய அறிவுரைகள் இந்திய U19 அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு பெரிய உதவியாக மாறியுள்ளது.

யாஷ் துல் தலைமையிலான U19 உலகக்கோப்பை இந்திய அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

இந்த போட்டியில் இங்கிலாந்து அணிதான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எனினும் இந்திய பவுலர்கள் ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும், ராஜ் பவா 5 விக்கெட்டுகளும் கைப்பற்ற அந்த அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி எந்தவித பதற்றமும் இன்றி சீரான இடைவெளியில் ரன்களை உயர்த்தியது.

உலகக்கோப்பை வெற்றி

உலகக்கோப்பை வெற்றி

ஆட்டத்தின் 2வது பந்திலேயே இந்தியாவுக்கு முதல் விக்கெட் சரிந்தது. எனினும் அதன் பின்னர் வந்த ஷாயிக் ரஷித், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைசதம் அடிக்க இந்திய அணி சீரான வேகத்தில் இலக்கை நோக்கி நகர்ந்தது. இறுதியில் ராஜ் பவா 35 ரன்கள் கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைக்க 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

விராட் கோலி தான் காரணமா?

விராட் கோலி தான் காரணமா?

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் முன்னாள் கேப்டன் விராட் கோலி அட்வைஸ் இருந்துள்ளார். அரையிறுதி வென்றவுடன் இந்திய அணிக்கு வீடியோ கால் மூலம் அறிவுரைகள் கூறியிருந்த விராட் கோலி, இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும் கேப்டன் யாஷ் துல்லிற்கு தொடர்பு கொண்டு ஃபீல்டிங்கில் சில அட்வைஸ்களை செய்ததாகவும், அதன்படியே இங்கிலாந்தை சுருட்டியதாகவும் தெரிகிறது.

கூறிய அட்வைஸ்கள் என்ன

கூறிய அட்வைஸ்கள் என்ன

விராட் கோலியின் வீடியோ கால் குறித்து முன்னதாக பேசியிருந்த யாஷ் துல், விராட் கோலி போன்ற சீனியர் வீரர் எங்களுக்கு அட்வைஸ் வழங்கியது பெரும் நம்பிக்கையை கொடுத்தது. அவர் என்னிடம் சில முக்கிய அட்வைஸ்களை வழங்கியுள்ளார். ஆட்டத்தின் அடிப்படை என்ன, அழுத்தங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என அறிவுரைகளை கூறியதாக யாஷ் துல் தெரிவித்தார்.

Story first published: Monday, February 7, 2022, 0:02 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+