
தொடக்கம் சொதப்பல்
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ஃபீனிக்ஸ் பறவைகளாய் பார்க்கப்படும் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணைக்கேப்டன் ஷாயிக் ரஷித் ஆகியோரின் ஆட்டமே காரணம். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஆங்கிரிஷ் 6 ரன்கள், ஹர்னூர் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 37 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்
இனி அடுத்தடுத்து விக்கெட் விழும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நாங்கள் இருக்கிறோம் என வந்தார்கள் யாஷ் துல், ஷாயிக் ரஷித். இரும்பில் செய்துவைத்த தூணை போன்று, அவர்கள் அமைத்த பலமான பார்ட்னர்ஷிப்பை ஆஸ்திரேலிய பவுலர் தகர்க்க முடியாமல் திணறினர். அவர்கள் இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டிற்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உலகக்கோப்பை தொடரில் 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவே ஆகும்.

அசத்தல் வெற்றி
ஒரு புறம் கேப்டன் யாஷ் துல் சதமடிக்க ( 110 ) மற்றொரு புறம் துணைக்கேப்டன் ஷாயிக் ரஷித் 94 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் விளாசியது. கடினமான இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 41. 4 ஓவர்களுக்குள் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அவுட்டானது.

ஃபீனிக்ஸ் மனிதர்கள்
இந்நிலையில் அரையிறுதியில் இந்திய அணியை காப்பாற்றிய யாஷ் துல் மற்றும் ஷாயிக் ரஷித் ஆகியோர் ஃபீனிக்ஸ் மனிதர்களாக பாராட்டப்படுகின்றனர். இந்த 2 வீரர்களுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர். இதனால் லீக் சுற்றில் 2 போட்டிகளில் ( அயர்லாந்து & உகாண்டா) அவர்களால் விளையாட முடியவில்லை. இந்த சூழலில் அரையிறுதிப்போன்ற முக்கிய நேரத்தில் இந்திய அணியை காப்பாற்றுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Recommended Video

ரசிகர்கள் சிலிர்ப்பு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அடுத்த 20 - 30 நாட்களுக்கு உடல் சோர்வுடன் இருக்கும் வீரர்களுக்கு மத்தியில் இந்த 2 இளம் சிங்கங்கள் ஒரே வாரத்தில் மீண்டு வந்து 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ரசிகர்களுக்கு சிலிர்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











