Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிராக எங்களால் எதுவும் செய்ய முடியாது.. பாகிஸ்தானிடம் கைவிரித்த ஐக்கிய அரபு அமீரகம்

துபாய்: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து இருப்பதன் காரணமாக தற்போது எல்லையோரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடிய வீரர்கள் அனைவரும் பயந்து தங்களது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தற்போது நிறுத்தப்பட்டு யு ஏ இ யில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

PSL

இந்த நிலையில் இந்த தொடரை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள செய்திகள் இந்தியாவுடன் தற்போது மோதல் போக்கை பாகிஸ்தான் கடை பிடித்து வருவது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி விட்டு தற்போது துபாயில் போட்டிகளை நடத்துவதை அந்நாட்டு அரசு விரும்பவில்லை. இதனால் இந்தியாவை எதிர்த்துக்கொண்டு போட்டிகளை நடத்த முடியாது என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பிஎஸ்எல் தொடரை எங்கு நடத்துவது என்று தெரியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழித்துக் கொண்டு வருகிறது.

ஒரு வேலை ஐபிஎல் தொடரை துபாயில் நடத்த பிசிசிஐயை விரும்பினால் இந்தியாவுக்கே முன்னுரிமை கொடுக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுக்கும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் psl தொடர் பெரும் சிக்கலை சந்தித்து இருக்கிறது. இதனுடைய ஐபிஎல் தொடர் தற்போது செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, May 9, 2025, 21:00 [IST]
Other articles published on May 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+