Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எங்க டீம் உலகக்கோப்பை வென்றால் தான் கல்யாணம் பண்ணுவேன்”.. அடம்பிடிக்கும் வங்கதேச ரசிகர்!

ஷார்ஜா: வங்கதேச அணி உலகக் கோப்பை வென்றால் மட்டுமே தனக்குத் திருமணம், அதுவரை தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ரசிகர் ஒருவர் பதாகை ஏந்தி இருந்தது கிரிக்கெட் உலகை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக வங்கதேச அணி விளையாடி வருகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதின. முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் வங்கதேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் தான் வங்கதேச அணி உலகக் கோப்பை வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற பதாகையை ஏந்தி இருந்த காட்சி நேரலையில் காண்பிக்கப்பட்டது.

Bangladesh World Cup T20 cricket UAE

இது கிரிக்கெட் உலகில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதுவரை வங்கதேச அணி, இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களில் எந்தக் கோப்பையையும் வென்றதில்லை. ஆசிய கோப்பை உட்பட எந்த கோப்பையையும் வங்கதேசம் வென்றதில்லை. இந்த நிலையில், வங்கதேச அணி உலகக் கோப்பை வென்றால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அந்த ரசிகர் கூறி இருந்தது நகைச்சுவையாகவும் அமைந்தது.

பலரும் அந்த ரசிகருக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் நடைபெறாது என கிண்டல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியின் வர்ணனையாளரோ அந்த ரசிகருக்கு ஒரு வாய்ப்பை அளித்தார். 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற உள்ள நிலையில், இந்த இரண்டு உலகக் கோப்பைகள் வரை மட்டும் அவர் காத்திருக்கலாம். அந்த இரண்டு தொடர்களிலும் வங்கதேசம் கோப்பை வெல்லவில்லை என்றால், அவர் தனது பிடிவாதத்தை விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.

அந்த ரசிகர் வங்கதேச அணி உலகக் கோப்பை வெல்லும் என நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராகவே வங்கதேசம் தோல்வியடைந்தது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல அமைந்தது. மேலும், டி20 வரலாற்றில் வங்கதேச அணியை முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்று வரலாற்று வெற்றியையும் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தன்ஷித் ஹாசன் 33 பந்துகளில் 59 ரன்களும், லிட்டன் தாஸ் 32 பந்துகளில் 40 ரன்களும், ஷாண்டோ 19 பந்துகளில் 27 ரன்களும், தவ்ஹீத் ஹ்ரிடோய் 24 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். ஜாக்கர் அலி 6 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி 205 ரன்கள் எடுத்த நிலையில், வங்கதேசம் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டனும், துவக்க வீரருமான முகமது வாசிம் பட்டையைக் கிளப்பினார். அவர் 42 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் எடுத்த போதும், ஐக்கிய அரபு அமீரக அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் 9 ஆம் வரிசை வீரர் ஹைதர் அலி 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Story first published: Tuesday, May 20, 2025, 15:15 [IST]
Other articles published on May 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+