Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கிரிக்கெட் வருது வருது.. ரெடியாகும் ரசிகர்கள்.. தினசரி 3500 விசாக்கள்

லண்டன்: 2019 ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் மைதானங்களில் நடக்க உள்ளது. இதைக் காண உலகில் உள்ள பிற நாடுகளை விட இந்தியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மோதும் ஆட்டத்தை காண இந்திய ரசிகர்கள் மட்டுமலாது வெளிநாட்டு ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். இதனால் இந்தியா மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை விட இந்தியா விளையாடும் போட்டிக்கு டிக்கெட் விலை கூடுதலாக உள்ளது. நம் நாட்டு அணி ஜூன் 5-ந்தேதி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது. சவுத்தம்டனில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஹோட்டல் பாக்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.63,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதோடு வாட் வரியும் சேர்த்தே வசூலிக்கப்படும்.

இந்தியா ஆட்டம்

இந்தியா ஆட்டம்

அதே வேளையில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஆட்டமும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்துக்கு ஹோட்டல் பாக்சின் டிக்கெட் விலை ரூ.54,418 + வாட்வரி ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் இந்திய அணி ஆடும்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ரூ.10 ஆயிரம் கூடுதலாகும்.

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

இந்தியா மோதும் ஆட்டத்தின்போது இந்த ஸ்டேடியத்தில் உள்ள ரூப்டாப் ஹோமர் ஸ்டாண்ட்டின் கட்டணம் ரூ.31 ஆனால் இங்கிலாந்து மோதும் போட்டிக்கான கட்டணம் .27,159 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 16 ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இந்திய அணி பிற அணிகளுடன் மோதும் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் பெரும்பாலும் விற்றுவிட்டன.

ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதைக் கண்டு ரசிப்பதற்காக ஏராளமான இந்திய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இங்கிலாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏறத்தாழ 80,000 பேர் இந்திய பாஸ்போர்ட்டுடன் பயணிக்கவிருப்பதாக பிரிட்டிஷ் உயர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

விசா விண்ணப்பங்கள்

விசா விண்ணப்பங்கள்

இது குறித்து பிரிட்டிஷ் உயர் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இப்போது வரை இங்கிலாந்து விசாக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அது இந்த மாதம் மேலும் அதிகரித்து தினம்தோறும் இந்தியர்களிடமிருந்து சுமார் 3,500 விசா விண்ணப்பங்கள் வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

150 கோடி ரசிகர்கள்

150 கோடி ரசிகர்கள்

கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை 73 கோடி இந்தியர்கள் கண்டு ரசித்துள்ளனர். இந்த எண்ணிக்கை உலகம் முழுவதும் கண்டுகளித்த ஒட்டுமொத்த ரசிகர்களில் மூன்றில் ஒரு பங்காகும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியை உலகம் முழுவதும் 150 கோடிப் பேர் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்திய மற்றும் உலக ரசிகர்களுக்கு ஸ்டார்ட் மியுசிக்க்க்க்.

Story first published: Friday, May 17, 2019, 10:18 [IST]
Other articles published on May 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+