Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அல்டிமேட் 'ரூம்'.. கனவில் கூட காணாத 'கிரிக்கெட் வியூ' - முண்டியடிக்கும் ரசிகர்கள்

இங்கிலாந்து: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியை, இதைவிட ஒருவர் சொகுசாக அதுவும் லைவாக பார்த்துவிட முடியாது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

சகல வசதி

சகல வசதி

இந்த நிலையில், இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மும்பையில் 14 நாட்கள் குவாரண்டைனில் இந்திய வீரர்கள் நேற்று (மே.19) முதல் இணைந்துள்ளனர். ஜூன் 2ம் தேதி மும்பையில் இருந்து லண்டன் செல்லும் இந்திய வீரர்கள், அங்கிருந்து போட்டி நடைபெறும் மைதானமான சவுத்தாம்ப்டன் 'Ageas Bowl' ஸ்டேடியத்திற்கு செல்கின்றனர். அது வெறும் மைதானம் மட்டும் அல்ல. அந்த ஸ்டேடியத்தில் சகல வசதியும் கொண்ட நட்சத்திர ஹோட்டலும் உள்ளது. வீரர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு அந்த மைதானத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தான் தங்குகின்றனர்.

171 அறைகள்

171 அறைகள்

ஹோட்டல்-னா நீங்க நினைக்கிற மாதிரி சாதாரணமானது இல்லீங்க. ஏசி ரூமில் படுத்துக் கொண்டே, பக்கா வியூவில் நீங்கள் போட்டியை உங்கள் அறையில் இருந்தே பார்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் தான் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்டேடியத்தில், 2011ம் ஆண்டு இங்கிலாந்து - இலங்கை இடையே முதல் டெஸ்ட் போட்டி நடந்தாலும், ஹோட்டல் 2015 வரை திறக்கப்படவே இல்லை. 3 தளங்கள் கொண்ட இந்த ஹோட்டலில், மொத்தம் 171 அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பால்கனி இருக்கிறது. அதேபோல், இந்த 171 அறையில் இருந்தும் போட்டியை நீங்கள் நேரடியாக கண்டு ரசிக்க முடியும்.

ரசிகர்களிடையே போட்டி

ரசிகர்களிடையே போட்டி

இதுபோன்று போட்டி நடக்கும் காலங்களில், 20 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஏனெனில், இங்குள்ள அறைகளில் இருந்து கிரிக்கெட்டை ரசிக்க வேண்டும் என்பதில் ஏக டிமாண்ட் உள்ளது. கலெக்ஷன் கல்லா கட்டுமாம். குறிப்பாக, 2018ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிய போது, இந்த 20 அறைகளில் இடம்பிடிக்க ரசிகர்களிடையே போட்டாப்போட்டியே நடைபெற்றதாம்.

ஹார்ட் குவாரண்டைன்

ஹார்ட் குவாரண்டைன்

இங்குள்ள அறைகளில் இந்திய வீரர்களும் அவர்களது குடும்பமும், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய வீராங்கனைகளும் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்படுகின்றனர். மொத்தம் 10 நாட்கள் குவாரண்டைன் இருக்கும். அதுவும் ஹார்ட் குவாரண்டைனாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், வீரர்கள் பயிற்சிக்கு கூட வெளியே செல்ல முடியாது.

Story first published: Thursday, May 20, 2021, 13:23 [IST]
Other articles published on May 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+