வடிவேலு பாணியில் உளறிய பாக். வீரர்.. விடுவார்களா? மொத்தமாக வச்சு செஞ்ச நெட்டிசன்கள்
Recommended Video

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் ட்விட்டரில் தவறுதலாக ஐபிஎல் என்று கூறியதால் அவரை நெட்டிசன்கள் உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டனர்.
ஐபிஎல் போன்றே, பாகிஸ்தானில் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்நதாண்டுக்கான தொடரின் முதல் 26 லீக் சுற்றுப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து கடைசி சில லீக் போட்டிகளும், தகுதி சுற்று போட்டிகள் உட்பட இறுதி போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளன. அதனால் மார்ச் 7ம் தேதி முதல், பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

புரோமோஷன் வீடியோ
இந்நிலையில், குவெட்டா கிளாட்டியேட்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. போட்டிக்கு முன்பாக குவெட்டா அணிக்காக விளையாடிவரும் பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல், தங்கள் அணியை புரோமோஷன் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

வினையான வீடியோ
அந்த வீடியோ அவருக்கே தற்போது வினையாக வந்து முடிந்துள்ளது. படம் ஒன்றில் உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை யுவர் ஆனர்... என்று வடிவேலு உளறியதை போல அக்மல் உளறியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் களமிறங்கும் தங்கள் அணிக்கு ஆதரவு அளித்தால் சிறப்பாக விளையாட முடியும்.
உளறிய அக்மல்
இதுபோன்ற ஆதரவை ரசிகர்கள் அளிக்கும் பட்சத்தில் அடுத்த ஐபிஎல் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தவறுதலாக கூறுகிறார். பின்னர் அடுத்த நொடியே தவறாக பேசியதை உணர்ந்து.... அதை மாற்றி பிஎஸ்எல் என்று கூறினார்.

நெட்டிசன்கள்
யார் சிக்குவார்கள்...? யாரை பிரித்து மேயலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு எப்படியோ இது தெரிந்துவிட்டது. உடனே உள்ளே புகுந்து கலாய்த்து தள்ளிவிட்டனர்.

ரசிகர்கள் கிண்டல்
இந்த வீடியோவை அவர் பதிவிட்டதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல நெட்டீசன்களும் அவரை கலாய்த்துவருகின்றனர். அந்த வீடியோவையும் இணைத்து... இப்படித் தான் இல்லை... வறுத்து தள்ளிவிட்டனர்.

2வது முறை
அக்மல் இதுபோன்று நெட்டிசன்களிடம் அவர் சிக்கி கொள்வது முதல் முறையல்ல். 2018ம் ஆண்டு கிக் பாக்ஸிங் வீடியோ பதிவிட்டபோதும் அவரை கலாய்த்து தள்ளிவிட்டனர்.


Click it and Unblock the Notifications