Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை ஏன் அணியில் எடுத்தீர்கள்.. முகத்தை திருப்பிய பும்ரா.. கோபப்படுத்திய மூத்த வீரர்.. பரபர சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஒருவரின் செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா தற்போது நிதானமாக ஆடி வருகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

இந்த போட்டியில் புதிய பந்தில் பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் பந்து வீசினார்கள். பும்ரா புதிய பந்தை பயன்படுத்தி சிறப்பாக பவுலிங் செய்தார். புதிய பந்தை வைத்து துல்லியமான ஸ்விங், யார்க்கர் என்று வீசினார். புதிய பந்தில் பவுலர்களுக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடியை கொடுத்தார்.

மோசம்

மோசம்

ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் உமேஷ் யாதவ் புதிய பந்தை கொஞ்சம் கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை. எந்த பந்தையும் ஸ்டம்பை நோக்கி உமேஷ் யாதவ் வீசவில்லை. முதல் டெஸ்ட் போட்டியிலும் கூட புதிய பந்தில் பவுலிங் வீசி உமேஷ் யாதவ் சொதப்பினார்.

ஸ்விங்

ஸ்விங்

புதிய பந்தை வைத்து தொடக்கத்திலேயே விக்கெட் எடுக்க முடியும். பந்தும் தொடக்கத்தில் நல்ல வேகமாக செல்லும். இதை பயன்படுத்திதான் இன்று அஸ்வின், பும்ரா இரண்டு பேருமே விக்கெட் எடுத்தனர் . ஆனால் உமேஷ் யாதவ் கொஞ்சம் கூட புதிய பந்தை சரியாக பயன்படுத்தவில்லை.

முதல் 10 ஓவர்

முதல் 10 ஓவர்

முதல் ஓவரில் பும்ரா சிறப்பாக பந்து வீசிய நிலையில் , உமேஷ் யாதவ் கொஞ்சம் கூட பும்ராவிற்கு உறுதுணையாக இல்லை. உமேஷ் யாதவின் இந்த செயல் அணியில் இருக்கும் வீரர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. பும்ராவும் முதலில் உமேஷ் யாதாவிற்கு முடிந்த அளவு அறிவுரைகளை வழங்கி பார்த்தார்.

ஆனால் கேட்கவில்லை

ஆனால் கேட்கவில்லை

ஆனால் பும்ரா சொன்ன அறிவுரை எதையும் உமேஷ் யாதவ் கேட்கவில்லை. இதனால் பும்ராவும் கொஞ்சம் விரக்தி அடைந்தார். தனக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட பின்பும் கூட உமேஷ் யாதவ் அதை சரியாக பயன்படுத்தாமல் சொதப்பி வருகிறார்.

Story first published: Saturday, December 26, 2020, 9:29 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+