உமேஷ் புயலில் விழுந்த 100வது விக்கெட்.. சதம் போட்ட 8வது இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
Recommended Video

அதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்..வீடியோ
பெங்களூரு: இந்திய வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அதிரடியாக 100வது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். 100 விக்கெட் சாய்க்கும் 8வது இந்திய வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆவார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான பெங்களூர் டெஸ்ட் போட்டி படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. முதலில் ஆடிய இந்தியா 474 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் மோசமாக ஆடி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் அது பாலோ ஆன் பெற்றது.

2வது இன்னிங்ஸிலும் அந்த அணிக்கு நேரம் சரியில்லை. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் அசத்தினார் என்றால், 2வது இன்னிங்ஸில் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் புரட்டி எடுத்து விட்டார்.
இப்போட்டியில் உமேஷ் யாதவ், ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா விக்கெட்டை வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய 8 ஆவது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
ஒட்டுமொத்தமாக 22 இந்திய பந்துவீச்சாளர்கள் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்கள். இந்திய வீரர் அணில் கும்ப்ளே 619 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன்னாள் 7 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை செய்துள்ளார்கள். அதன் பட்டியல்:
1. கபில் தேவ் - 434 விக்கெட்கள் - 131 டெஸ்ட்கள்
2. ஜாஹீர் கான் - 311 விக்கெட்கள் - 92 டெஸ்ட்கள்
3. ஜவகல் ஸ்ரீநாத் - 236 விக்கெட்கள் - 67 டெஸ்ட்கள்
4. இஷாந்த் சர்மா - 236 விக்கெட்கள் - 82 டெஸ்ட்கள்
5. முகமத் ஷமி - 110 விக்கெட்கள் - 30 டெஸ்ட்கள்
6. கர்சன் ஷாவ்ரி - 109 விக்கெட்கள் - 39 டெஸ்ட்கள்
7. இர்பான் பதான் - 100 விக்கெட்கள் - 29 டெஸ்ட்கள்
8. உமேஷ் யாதவ் - 103 விக்கெட்கள் - 37 டெஸ்ட்கள்
Story first published: Friday, June 15, 2018, 17:31 [IST]
Other articles published on Jun 15, 2018


Click it and Unblock the Notifications