ரன்களை தாறுமாறாக வாரி விட்டு 4 விக்கெட் சாய்த்த உமேஷ் யாதவ்!
சிட்னி: தனது முதல் சுற்றின்போது ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவ் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை பிரித்து மேய்ந்து விட்டார்.

- முதல் ரவுண்டின்போது அதிக ரன்களைக் கொடுத்த கில்ட்டியோ என்னவோ கடைசி நேரப் பந்து வீச்சில் அனல் கிளப்பினார் உமேஷ் யாதவ்.
- முதல் 10 ஓவர்களில் இந்தியாவின் பந்து வீச்சு திருப்திகரமாக இல்லை. உமேஷ் யாதவ் சற்றுசொதப்பி விட்டார்.
- முதல் பத்து ஓவர்களில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்தது. இது சற்று அதிகம்தான்.
- ஷமியின் பந்து டைட்டாக இருந்தது போல, உமேஷின் பந்து வீச்சு இல்லை.
- ஆஸ்திரேலியர்கள் ஷார்ட் பந்துகளை அடித்துப் பிரித்து ஆப்பம் போட்டு விடுவார்கள்.
- இது தெரிந்தும் உமேஷ் நிறைய ஷார்ட் பந்துகளைப் போட்டார்.
- இந்திய வேகப் பந்து வீச்சின் வேகத்தை பின்ச் சமாளிக்கத் தடுமாறினாலும் கூட ஸ்மித் சரியாக கணித்து ஆடினார்.
- ஆனால் அடுத்து ஸ்பெல்லுக்குத் திரும்பி வந்த உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.
- கடைசி ஓவர்களில் உமேஷ் யாதவ் விஸ்வரூபம் காட்டினார். அபாயகரமாக ஆடிய பவுல்க்னரை வெளியேற்றியது இதில் முக்கியமானது.
- 9 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ் 72 ரன்களை வாரிக் கொடுத்து 4 விக்கெட்களைச் சாய்த்தார் உமேஷ் யாதவ்.
Story first published: Thursday, March 26, 2015, 19:34 [IST]
Other articles published on Mar 26, 2015


Click it and Unblock the Notifications