
அதிவேகம்
அவர் கூறியதாவது: சீராக மணிக்கு 90 மைல்கள் வேகத்தில் வீசும் உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளரை இதற்கு முன்பாக இந்தியாவில் நான் கண்டதில்லை. அந்த வகையில் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான்.

கபில்தேவ் வேறு
வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், குயிக் பவுலர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் கபில்தேவ் பந்தை ஸ்விங் செய்ய தெரிந்த வேகப்பந்து வீச்சாளர். ஆனால், குயிக் எனப்படும் அதிவேக பவுலர், சீராக மணிக்கு 90 மைல்களுக்கு மேல் பந்து வீச வேண்டும். அப்படியான ஒரு பவுலராக நான் யாதவை பார்க்கிறேன்.

ஸ்ரீநாத் நம்பிக்கையளித்தார்
இந்தியாவில் இதற்கு முன்பு ஜவகல் ஸ்ரீநாத் நம்பிக்கையளித்தார். ஆனால், அவரும், மற்ற சக இந்திய பவுலர்களைவிட வேகமாக வீசினாரே தவிர, மணிக்கு 90 மைல்களுக்கு மேல் வீசும் குயிக் பவுலராக இருந்ததில்லை. தற்போது யாதவ் மட்டுமின்றி முகமது ஷமியும் நம்பிக்கையளிக்கின்றனர்.

ஆக்ரோஷம்
யாதவ் மற்றும் ஷமி இருவருமே, தங்கள் பந்து வீச்சில் ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும். ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை. கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் நடுவேயான போட்டி. வெறும் பேட்ஸ்மேன்கள் ஆடும் போட்டியில்லை.

பவுன்சர் வீசுங்கப்பா
பேட்ஸ்மேன்கள் கனமான பேட்டுகளை பயன்படுத்துகின்றனர். வேகமாக பவுன்சர் வீசினால், பேட்மேன்கள் பேட்டை சுழற்றுவதற்குள் பந்தை கடந்து செல்ல வைத்துவிடலாம். ஆனாலும், இந்தக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர் வீசுவதை தவிர்த்து லெந்த்தில் வீசுவதில் கவனம் செலுத்துகின்றனர்.

வேரியேஷன் இப்படியும் காட்டலாம்
அதேபோல வித்தியாசமாக பந்துகளை வீச வேண்டி, வேகப்பந்து வீச்சாளர்கள் சற்றே மெதுவாக வரும் ஸ்லோ பந்துகளை வீச முடிவெடுக்கின்றனர். மணிக்கு 88-90 கிமீ வேகத்தில் வீசும் ஒரு பவுலர் ஏன் வித்தியாச பந்தை 95 கிமீ வேகத்தில் வீசக்கூடாது? திடீரென வேகத்தைக் கூட்டுவதும் வித்தியாச பந்துதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











