Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்னஸ் டெஸ்ட் எல்லாம் முடிஞ்சாச்சு... அடுத்தது ஸ்ட்ரெய்ட் டூ அகமதாபாத் தான்... உமேஷ் யாதவ் சிறப்பு!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் உமேஷ் யாதவ் இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுளள்து.

அவர் தனது பிட்னஸ் டெஸ்ட்களை முறையாக பூர்த்தி செய்துள்ள நிலையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பகலிரவு போட்டியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் இந்திய அணியில் 3 ஸ்பின்னர்களை கொண்டு போட்டி நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் முகமது சிராஜ், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டவர்களை கொண்டு பௌலிங் செய்யப்பட்டது.

காயம் காரணமாக விலகிய உமேஷ்

காயம் காரணமாக விலகிய உமேஷ்

இந்நிலையில் 3வது போட்டி அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கேற்று விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவ் தற்போது பிட்னசில் தேறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உமேஷ் யாதவ் பங்கேற்பு

உமேஷ் யாதவ் பங்கேற்பு

இதையடுத்து அவர் நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெறவுள்ள பகலிரவு போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்காக ஷர்துல் தாக்கூர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் உமேஷ் யாதவ் விளையாடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு

அடுத்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள நிலையில், மாலை நேரத்தில் பனி அதிகமாக காணப்படும் என்பதால் அதை சமாளிக்கும்விதமாக வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் இணைக்கும் முயற்சியாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, February 22, 2021, 16:13 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+