
டெஸ்ட்
இதில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கும். அதில் ஒரு போட்டி பிங்க் பால் போட்டியாகும். இதனால் இந்திய அணி 3 ஸ்பீட் பவுலர்களுடன் இந்த பிங்க் பால் போட்டியில் களமிறங்கும்.

பவுலர்கள்
இதனால இந்திய அணியில் நன்றாக பவுன்சர் வீச கூடிய வீரரை எடுக்க கோலி முடிவு செய்துள்ளார். தற்போது இருக்கும் இஷாந்த், பும்ரா, சிராஜ் என்று யாருமே பவுன்சர்களை அதிக அளவில் வீசுவது இல்லை. சைனியை அணியில் எடுத்தால் அவர் அதிகமாக ரன் கொடுப்பார்.

எப்படி
இதனால் தற்போது இந்திய அணியில் மீண்டும் உமேஷ் யாதவ் வந்துள்ளார். கையில் காயத்தோடு இவர் வெளியேறினார் . இந்தநிலையில் காயம் குணமடைந்த நிலையில் உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

காரணம் என்ன
இவருக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட் செய்யப்படும். இரண்டு நாட்களில் இவர் அணியில் இணைவார். அதன்பின் இரண்டு நாள் பயிற்சி செய்துவிட்டு இந்திய அணியில் இவர் ஆட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரின் வருகையால் இளம் வீரர் ஷரத்துல் தாக்கூர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

நீக்கம்
ஷரத்துல் தாக்கூர் தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளார். இவரை மீண்டும் டி 20 அணியில் எடுக்க வாய்ப்புள்ளது. அதுவரை விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இவர் ஆடுவார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications