தம்பி ஒரு நிமிஷம்.. ஆட்டம் முடிந்து கிளம்பிய வீரர்கள்.. அம்பயர் தந்த திடீர் ட்விஸ்ட்.. பாவம்பா ஜடேஜா
டெல்லி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா விக்கெட் எடுத்து இன்னிங்ஸை கைப்பற்றிய சூழலில் கடைசி நேரத்தில் அம்பயர்கள் பெரும் ட்விஸ்ட் கொடுத்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி பிட்ச்சானது முதல் 2 நாட்களுக்கு பேட்டர்களுக்கு சற்று உதவக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அதற்கேற்றார் போலதான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர்.

முதல் இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்த முறை சிறப்பான தொடக்கம் கிடைத்தது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்தனர். நட்சத்திர வீரர் வார்னர் 44 பந்துகளில் 15 ரன்களை சேர்த்து வலுவாக இருந்த போது துரதிஷ்டவசமாக அவுட்டானார். மற்றொரு ஓப்பனரான உஸ்மான் கவாஜா 81 ரன்களை விளாசினார்.

அஸ்வின் அட்டகாசம்
இதன் பின்னர் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் (0), மார்னஸ் லபுசாக்னே (18) ரன்களுக்கு அஸ்வினிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர்.168 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிய அந்த அணியை பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களை அடித்து ஸ்கோரை உயர்த்தி சென்றார். ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மட்டும் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்திய சூழலில் ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்து அதனை பிரித்தார்.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் தான் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று ரவீந்திர ஜடேஜாவுக்கு நடந்தது. ஆஸ்திரேலிய அணி 256 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்த போது ஜடேஜா வீசிய பந்தில் ஹேண்ட்ஸ் ஸ்கோம்ப் அவுட்டானார். சிக்ஸர் அடிக்க முயன்று அந்த பந்து அழகாக அஸ்வினிடம் கேட்ச்-ஆக சென்றது. இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 256 ரன்களுக்கு முடிக்கிறது என அனைவரும் பெவிலியன் நோக்கி கிளம்பினர்.

திடீர் ட்விஸ்ட்
அப்போது திடீரென அனைத்து வீரர்களையும் அழைத்த கள அம்பயர், போட்டி இன்னும் முடியவில்லை எனக்கூறினார். இதற்கு காரணம் ஜடேஜா வீசியது நோ பால் எனக்கூறினார். ஜடேஜவின் கால் கோட்டிற்கு வெளியில் வைத்ததாக கூறி நோ பால் கொடுத்தனர். இதனால் மீண்டும் அனைவரும் ஃபீல்டிங்கிற்கு வந்து நின்றனர். அடுத்த பந்தில் பவுண்டரி பறந்தது. அதே ஓவரில் அவரால் மீண்டும் விக்கெட் எடுக்கவே முடியவில்லை. இறுதியில் முகமது ஷமி தான் ஹேண்ட்ஸ்கோம்பின் விக்கெட்டை எடுத்தார். 256 ரன்களுக்கு நடையை கட்டியிருக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி 262 ரன்களை குவித்தனர்.


Click it and Unblock the Notifications