Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Harper and Dhoni
அடிலைட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சாதகமாக தீர்ப்பளித்து, இந்திய அணியினரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆஸ்திரேலிய நடுவர் டெரைல் ஹார்ப்பர் தற்போது இந்திய அணியின் கேப்டன் டோணி தன்னை மிரட்டியதாகவும், அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் பேசியுள்ளார்.

சமீபத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக இருந்தவர் ஹார்ப்பர். ஆஸ்திரேலியரான இவர் தப்புத் தப்பாக தீர்ப்பளித்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் தீர்ப்புகளை அளித்தார்.

இதனால் கோபமடைந்த கேப்டன் டோணியும், இந்திய அணியின் வீரர்கள் சிலரும் நடுவரின் தவறான தீர்ப்புகளை நாகரீகமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தனர்.

இதைப் பொறுக்க முடியாத ஹார்ப்பர், 3வது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி சர்வதேச அளவில் போட்டிகளில் நடுவர் பணியாற்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆஸ்திரேலியா போய் விட்டார்.

ஹார்ப்பருக்கு இப்படியாகி விட்டதே என்று புழுங்கிய ஆஸ்திரேலிய மீடியாக்களும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் டோணியையும், இந்திய அணியினரையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் வசை பாடி தங்களை குஷிப்படுத்திக் கொண்டனர்.

இதைப் பார்த்த ஐசிசியும், தன் பங்குக்கு இந்திய அணியினரின் செயலை கண்டித்தது. இது துரதிர்ஷ்டவசமானது என்றுகூறியது. ஆனால் ஹார்ப்பர் செய்தது தவறு என்று பட்டவர்த்தனமாக இவர்கள் யாரும் சொல்ல முன்வரவில்லை. ஏன் ஹார்ப்பரே கூட தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் டோணி தன்னை அச்சுறுத்தும் வார்த்தைகளில் மிரட்டியதாக பேசியுள்ளார் ஹார்ப்பர். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

முதல் டெஸ்ட் போட்டியின் போது டோணி என்னைப் பார்த்து பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்புத்தினார். பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தொடர்ந்து பிட்ச்சிலேயே ஓடி வந்து பந்து வீசியதால் அவரை பந்து வீசுவதை நிறுத்துமாறு நான் டோணியிடம் கூறினேன். இதையடுத்து என்னை நோக்கி வந்த டோணி, ஏற்கனவே உங்களால் எங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் வந்துள்ளது என்று கோபத்துடன் கூறினார். அவரது பேச்சு அச்சுறுத்துவதாக, மிரட்டுவதாக இருந்தது.

பின்னர் போட்டியின் முடிவில், சில சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்தப் போட்டி எப்போதோ முடிந்திருக்கும். நாங்களும் இன்னேரம் ஹோட்டலுக்குத் திரும்பியிருப்போம் என்று கூறினார். இது மிகவும் கண்டனத்துக்குரிய வார்த்தை. இதை அவர் திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.

டிஆர்எஸ் அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்தால் எனது முடிவுகளில் ஒன்று மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கும்.

நான் அந்தப் போட்டியில் 9 தவறுகளை செய்ததாக ஒரு பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். ஆனால் அதுகுறித்துப் பேச வேண்டியது ஐசிசிதான். ஆனால் அது அமைதியாக உள்ளது. மற்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பிரவீன் குமாருக்கு அது முதல் டெஸ்ட், எனவே அவரிடம் இத்தனை கடுமையாக நான் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார்கள். விளையாட்டை அவர்கள் முதலில் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. டெஸ்ட் போட்டி என்பது பயிற்சி ஆட்டம் அல்ல. அது மிகவும் சீரியஸாக விளையாடப்பட வேண்டியது. முதல் போட்டியில் விளையாடுகிறார் என்பதற்காக சலுகையெல்லாம் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்றார் ஹார்ப்பர்.
Story first published: Wednesday, May 30, 2012, 8:53 [IST]
Other articles published on May 30, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+