Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: கிரிக்கெட் உலகமே கண்டிராத வினோத அவுட் தந்த பிரபல அம்பயர்.. இந்தியா போட்டியுடன் ஓய்வு

லீட்ஸ்: இந்தியா, இலங்கை அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் லீக் போட்டியுடன் அம்பயர் இயான் கூல்டு ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். ஏற்கனவே திட்டமிட்டவாறு, தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது.

இந்நிலையில் இப்போட்டியில் அம்பயராக களத்தில் இறங்கிய இயான் கூல்டு இன்றோடு ஓய்வு பெற்றார். இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பரான இவர், 1983ல் நடந்த உலக கோப்பையில் பங்கேற்றவர்.

613 முதல் தர போட்டிகள்

613 முதல் தர போட்டிகள்

இங்கிலாந்து அணிக்காக 18 ஒருநாள் போட்டியில் பங்கேற்று, 613 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் அணியான மிடில்செக்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

13 ஆண்டுகாலம்

13 ஆண்டுகாலம்

அதன் பின்னர், 2006ம் ஆண்டு தமது அம்பயர் பொறுப்பை துவங்கிய கூல்டு இதுவரை 139 ஒருநாள் போட்டிகள், 74 டெஸ்ட் போட்டிகள், 37 டி-20 போட்டிகளில் அம்பயராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலமாக அம்பயராக இருந்திருக்கிறார்.

மறக்க முடியாத சம்பவம்

மறக்க முடியாத சம்பவம்

இயன் கூல்டின் அம்பயர் வாழ்க்கையை பற்றி அறிந்தவர்கள் அவர் அம்பயராக இருந்த ஒரு சம்பவத்தை மறக்க மாட்டார்கள். இன்னும்... சொல்லப்போனால், இது போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்போ அல்லது இனி எப்போதுமே நடக்காது என்று கூறலாம்.

வினோதமான அவுட்

வினோதமான அவுட்

கிரிக்கெட் வரலாற்றில் பல வினோத அவுட்களை பார்த்த ரசிகர்களுக்கு, அவுட் இல்லாததை அவுட் என்று கூறியவர் இயன் கூல்டு. இந்த சம்பவம் நடந்தது 2007ம் ஆண்டு. 2007ம் ஆண்டில் சர்ரே மற்றும் லீட்ஸ் ப்ராட்போர்ட் இடையேயான எம்சிசி பல்கலை கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்தது அந்த சம்பவம். அதை பார்த்து மிரண்டு போகாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்டது அந்த வீடியோ.

அப்பீல் கிடையாது

அந்த போட்டியில் பவுலர் வீசிய பந்து பேட்ஸ்மேனின் பேட் பக்கம் கூட செல்ல வில்லை. நேராக விக்கெட் கீப்பரின் கைகளுக்கு தஞ்சமடைகிறது. ஆனால், அம்பயரோ அவுட் என்று விரலை உயர்த்துகிறார். பந்துவீச்சாளர் மற்றும் பீல்டர்கள் என யாருமே அவுட் என்று அப்பீல் கூட செய்ய வில்லை. ஆனால், அம்பயர் விரலை தூக்கியதும், பிரச்சனையின்றி பேட்ஸ்மேன் நடையை கட்டினார்.

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

அம்பயர் ஏமாற்றினார், தீர்ப்புக்கு மறுபேச்சு பேசக்கூடாது என்று பேட்ஸ்மென் சென்றுவிட்டார் என்றும் கூட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த அவுட்டை ஏற்று, பேட்ஸ்மேனும் அமைதியாக வெளியே செல்ல காரணம் இருக்கிறது.

ஸ்டெம்பை அடித்தார்

ஸ்டெம்பை அடித்தார்

அந்த பேட்ஸ்மேன் அவுட் ஆகும் முன்பு, பந்தில் அவர் ஸ்டம்பை அடித்துவிட்டார். ஆனால் அந்த பந்தை டெட் பால் என்று கூறிய பின்னரே அவர் ஸ்டம்பை அடித்தது அம்பயர் இயான் கூல்டு கவனித்தார். அதனால், இரண்டு அணிகளின் வீரர்களும் பேசி, அடுத்த பந்தில் அவுட் ஆக வேண்டும் என்று கூறினார்கள்.

அந்த அம்பயர் இவர்

அந்த அம்பயர் இவர்

ஆனால், அடுத்த பந்தில் அந்த பந்தை பேட்ஸ்மேனின் பேட்டில் படவே இல்லை, ஆனால் நடுவர் அவுட் கூறிவிட்டார். இதனால், பேட்ஸ்மேனும் அமைதியாக சென்று விட்டார். அப்பொழுது இருந்த நடுவர் இயான் கூல்டு தான் தற்போது ஓய்வு பெறுகிறார். இந்த வீடியோவை கண்டுபிடித்து வெளியிட்டவர் யுவராஜ் சிங். அதன் பின்னரே கிரிக்கெட் உலகத்துக்கு இப்படி ஒரு அவுட் கொடுக்கப்பட்டது தெரிந்தது.

Story first published: Saturday, July 6, 2019, 23:35 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+