For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க எல்லாம் ஒரு அம்பயரு…? விக்கிபீடியாவை திருத்தி கண்டபடி விமர்சித்த ரசிகர்.. என்னா கோபம்..!!

Recommended Video

Umpire joel wilson: தவறான தீர்ப்பு..விக்கிபீடியாவில் கைவரிசையை காட்டிய ரசிகர்

பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடரில் தப்புத் தப்பாக முடிவுகளை வழங்கிய அம்பயர் ஜியோல் வில்சனை கண்தெரியாதவர் என்று ரசிகர் விமர்சித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன.

தொடர்ந்து ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இங்கிலாந்துக்கு, 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. கடைசி நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் மாயாஜால பந்தில் காலியானது.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து தோல்வி

கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடை வேளையின் போது, இங்கிலாந்து 2வது இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியது. கடைசியில் இங்கிலாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்ட நாயகனாக 2 இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டார்.

தீர்ப்பு, விமர்சனம்

தீர்ப்பு, விமர்சனம்

இந்நிலையில் போட்டியின் துவக்கத்தில் இருந்தே பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார் வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஜியோல் வில்சன். அவருடன் மற்றொரு அம்பயரான அலீம் தாரும் பல முறை தவறான தீர்ப்புகளை அளித்து அதிர்ச்சி அளித்தார்.

குருட்டு அம்பயர்

குருட்டு அம்பயர்

அதனால் கடுப்பான ரசிகர் ஒருவர் செய்த செயல் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் ஏகத்துக்கும் கோபப்பட்ட அந்த ரசிகர், வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஜியோல் வில்சனின் விக்கி பீடியா பக்கத்தில் சர்வதேச கண் தெரியாத அம்பயர் என்று மாற்றினார். 1966ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி டிரினாட், டோபாகோவில் பிறந்தவர் ஜியோல் வில்சன், இவர் ஒரு கண் தெரியாத சர்வதேச அம்பயர் என்று திருத்தி, ஆத்திரத்தை தணித்துக் கொண்டார் அந்த ரசிகர்.

2வது முறை

2வது முறை

2வது முறையாகவும் அவரின் விக்கிபீடியா பக்கம் மாற்றியமைக்கப்பட்டது. அதில் ஜியோல் வில்சன் சர்வதேச அம்பயர் இல்லை என்ற வார்த்தை இடம்பெற்றது. ரசிகர்கள் மட்டும் அல்ல.. ஒளிபரப்பில் இருந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும், அம்பயர்களின் முடிவுகளை காய்ச்சி எடுத்துவிட்டனர் .

Story first published: Tuesday, August 6, 2019, 10:44 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Umpire joel wilsons decision makes controversy, fans edit Wikipedia page.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+