இதற்கெல்லாம் ‘அம்பயர்ஸ் காலா’ இறுதிப்போட்டியிலும் நடுவர்கள் சர்ச்சை.. சாஹீன் பக்கம் நியாயம் உள்ளதா?
மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் சாஹீன் அஃப்ரிடியை அம்பயர்கள் ஏமாற்றிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் மோசமாக திணறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

அசத்தல் வெற்றி
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய போதும், பென் ஸ்டோக்ஸ் மட்டும் தூண் போல நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். இதனால் 19 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. மேலும் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

அம்பயர்கள் முடிவு
இந்நிலையில் இந்த போட்டியிலும் அம்பயர்கள் வழங்கிய முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் 3வது ஓவரில் சாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தில் பிலிஃப் சால்ட் லெக் சைடில் அடிக்க முயன்று தவறவிட்டார். அந்த பந்திற்கு நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்காத நிலையில் மிகவும் நம்பிக்கையாக இருந்த பாபர் அசாம் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார்.

கணிப்பு சரியானது
அவர்கள் கணித்தது போல பந்து சரியாக ஸ்டம்ப்களில் படும்படி சென்றது. ஆனால் 3வது நடுவர் 'அம்பயர்ஸ் கால்' எனும் முடிவை தான் கொடுக்க, கள நடுவர் கொடுத்த நாட் அவுட் என்பதே முடிவானது. இதனை கேட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபத்தில் விமர்சனங்களை அடுக்க தொடங்கியுள்ளனர். ஸ்டம்பில் முழுவதுமாக பட்ட போதும் அம்பயர்ஸ் காலாக சென்றதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

காரணம் என்ன
சாஹீன் அஃப்ரிடி ரவுண்ட் தி லெக் திசையில் இருந்து ஓடி வந்து போட்டார். ஃபுல் டாஸாக போடப்பட்ட அந்த பந்து, பேட்ஸ்மேனின் பேடில் படும்போது ஸ்டம்ப் லைனில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த பந்தோ பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் இருந்தது. இதனால் தான் அம்பயர்ஸ் கால் எனக் கொடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications