Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின் போது அம்பயர் மராயிஸ் எராஸ்மஸ் எனக்கென்ன ஆனது என்பது போல செய்த ஒரு விஷயத்தால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மாங்கௌங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 298 ரன்களை குவித்தது.

இங்கிலாந்தின் தோல்வி

இங்கிலாந்தின் தோல்வி

299 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. ஜேசன் ராய் 91 பந்துகளில் 113 ரன்களை அடிக்க, டேவிட் மாலன் 59 ரன்களை அடிக்க, முதல் விக்கெட்டிற்கே 146 ரன்கள் சேர்ந்தன. ஆனால் அதன் பின்னர் தான் சரிவு தொடங்கியது. அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அம்பயரின் செயல்

அம்பயரின் செயல்

இந்நிலையில் இந்த போட்டியின் போது அம்பயர் மராயிஸ் எராஸ்மஸ் செய்த விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கிலாந்தின் இன்னிங்ஸில் 24வது ஓவரில் ஜேசன் ராய் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். மிகவும் முக்கியமான அந்த கட்டத்தில், ராய் ஒரு புறம் பேட்டிங் செய்துக்கொண்டிருக்க, லெக் திசையில் நின்றிருந்த அம்பயர் மராஸ்மஸ் ரசிகர்கள் இருந்த திசையை நோக்கி நின்று கையில் எதையோ வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் இங்கு பந்துகள் வீசப்பட்டுக்கொண்டிருந்தன.

அதிர்ஷ்டவசமான முடிவு

அதிர்ஷ்டவசமான முடிவு

அதிர்ஷ்டவசமாக அவர் கண்டுக்கொள்ளாமல் இருந்த அந்த சமயத்தில் எந்தவித சர்ச்சையான ரன் அவுட், எல்.பி.டபள்யூ, பவுன்சர் என எதுவும் ஆகவில்லை. இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வரும் ரசிகர்கள், அம்பயருக்கு 50 ஓவர் போர் அடிப்பது போல் இருக்கிறது, இதனால் என்ன நடந்தால் நமக்கென்ன என்பது போல் உள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

சர்ச்சை முடிவுகள்

சர்ச்சை முடிவுகள்

சமீப காலமாக அம்பயர்கள் உற்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே பல்வேறு தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு விடுகின்றன. சமீபத்தில் கூட நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பாண்ட்யாவை டாம் லேதம் ஸ்டம்பிங் செய்தார் என வீடியோவை பார்த்து அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் டாம் தான் கைகளால் ஸ்டம்புகளை தட்டிவிட்டிருந்தார். இப்படி இருக்கையில் எராஸ்மஸ் செய்திருப்பது பேசுப்பொருளாகியுள்ளது.

Story first published: Saturday, January 28, 2023, 15:04 [IST]
Other articles published on Jan 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+