Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேள்வி கேட்ட கோலி மீது ஆத்திரம்... கதவை உடைத்த அம்பயர்...! விளைவு ரூ5,000 பைன்... இது தேவையா?

Recommended Video

IPL 2019 Bengaluru vs Hyderabad | கேள்வி கேட்ட கோலி மீது ஆத்திரம் ! விளைவு ரூ5,000

பெங்களூரு:விராட் கோலி உடனான வாக்குவாதத்தில் பொறுமையை இழந்த நடுவர் நிகெல் லாங், கோபத்தில் கதவை சேதப்படுத்த, அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 54வது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.

பெங்களூரு வெற்றி

பெங்களூரு வெற்றி

176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட் மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

நோபால் சர்ச்சை

நோபால் சர்ச்சை

இதில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் பந்து வீசினார். அந்த பந்தை களநடுவராக இருந்த நிகெல் லாங் நோ பால் என்று அறிவித்தார். ஆனால் உமேஷ் அந்த பந்தை சரியாக தான் வீசினார் என்று நடுவருடன் கேப்டன் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கதவு உடைந்தது

கதவு உடைந்தது

ஒரு வழியாக போட்டியும் முடிந்தது. கோலி தன்னிடம் வாக்குவாதம் செய்ததை நினைத்துக் கொண்டே ஓய்வறைக்கு சென்றார் நடுவர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆத்திரம் கொண்டவராக, அங்கிருந்த கண்ணாடி கதவை தனது காலால் எட்டி உதைத்தார். அதனால் அந்த கதவு உடைந்தது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் சங்கம் இந்த சம்பவம் குறித்து ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறையிட இந்த சம்பவத்தில் நடுவரின் தவறு உறுதி செய்யப் பட்டு அவருக்கு அபராதத்தினை விதித்தது. அதன்காரணமாக உடைத்த கதவை மாற்ற ரூபாய் 5000 அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை நடுவர் தனது ஊதியத்திலிருந்து செலுத்தி இருக்கிறார்.

Story first published: Tuesday, May 7, 2019, 16:31 [IST]
Other articles published on May 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+