For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டியை டி 20 ஆக மாற்றிய தனி ஒருவன்..!! ஆஸி.யை அலற வைத்து ஆஷஸ் நாயகன்

Recommended Video

பென் ஸ்டோக்ஸ் மரண அடி.. இங்கிலாந்து வெற்றியை வரலாறு பேசும்- வீடியோ

லீட்ஸ்:ஆஷஸ் டெஸ்டில் அதிரடியை கையில் எடுத்து பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டத்தால் இங்கிலாந்து மரண மாஸாக 3வது டெஸ்ட்டை வென்றிருக்கிறது.

5 டெஸ்ட் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் கலக்கலாக வென்றது. லண்டன் லார்ட்சில் நடந்த 2வது போட்டி மழையின் குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. 3வது போட்டி லீட்ஸில் கடந்த 22ம் தேதி தொடங்கியது.

வழக்கம் போல் பெருத்த எதிர்பார்ப்புடன் இந்த போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்யுமாறு கூறியது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 ரன்கள் அடிக்க, இங்கிலாந்தோ 67 ரன்களில் அடங்கியது.

ஒருவர் மட்டுமே 12

ஒருவர் மட்டுமே 12

அந்த அணியின் முதல் இன்னிங்சில் இரட்டை இலக்க ரன் அடித்த ஒரே வீரர் டென்லி மட்டுமே. அதுவும் வெறும் 12 ரன்கள். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கம் தான். 112 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை கையில் எடுத்த ஆஸி. 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதாவது மொத்தம் 358 ரன்கள் முன்னிலை பெற, இங்கிலாந்தின் வெற்றிக்கோ 359 ரன்கள் தேவைப்பட்டது.

வாழ்நாளில் இல்லை

வாழ்நாளில் இல்லை

359 ரன்கள் என்பது இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு. ஏன் என்றால், இங்கிலாந்து தமது வாழ்நாளில் ஒருமுறை கூட 359 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி கண்டதில்லை. அதிகபட்சமாக அந்த அணி வெற்றிகரமாக விரட்டியது 332 ரன்கள் மட்டுமே.

சொதப்பிய பேட்டிங்

சொதப்பிய பேட்டிங்

ஆனால், இங்கிலாந்து பேட்டிங்கோ, அதல பாதாளத்துக்கு சென்றது. தொடக்க வீரர்கள் பர்ன்ஸ், ராய் சொதப்பினர். பெரிய பார்ட்னர்ஷிப் என்ற கட்டாயத்தில் ரூட்டும், டென்லியும் கை கோர்த்தனர். அதை செய்தும் காட்டினர். டென்லி 50 ரன்களிலும், ரூட் 77 ரன்களிலும் அவுட்டாகினர்.

ஸ்டோக்சுக்கு நெருக்கடி

ஸ்டோக்சுக்கு நெருக்கடி

இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. ஸ்டோக்சுடன் சேர்ந்து பெயர்ஸ்டோவ் மட்டும் ஏதோ பரவாயில்லை ரகம் போல கொஞ்ச நேரம் ஆடினார். 36 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பட்லர், வோக்ஸ் இருவரும் தலா 1 ரன்னில் வெளியேறினர்.

73 ரன்கள் அவசியம்

73 ரன்கள் அவசியம்

ஸ்டோக்ஸ் மட்டும் ஒருமுனையில் நங்கூரமாய் நின்றார். அவருக்கு ஈடு கொடுக்க தான் ஆளில்லாமல் இருந்தது. 286 ரன்களுக்கு இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. ஒரு விக்கெட் தான் பாக்கி, வெற்றி பெற 73 ரன்கள் தேவை. அப்போது தான் தமது அதிரடியை கையில் எடுத்தார் ஸ்டோக்ஸ்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் பந்துகளை நொறுக்கினார். யாருக்கும் எந்த தயவும் காட்டவில்லை. பாரபட்சமின்றி அடித்து நொறுக்கினார். மறுமுனையில் தனது விக்கெட்டை இழந்து விடாமல் கவனமாக நின்றார் லீச். ஆரம்பத்தில் 70 பந்துகளுக்கு மேல் ஆடி வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்டோக்ஸ், 219 ரன்களில் 135 ரன்கள் என்ற இன்னிங்சை முடித்தார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

அதில், 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 135 ரன்களை குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்சின் அபாரமான பேட்டிங்கால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, ஆஷஸ் தொடரை 1க்கு 1 என சமனானது. கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கே கோப்பை. போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Story first published: Monday, August 26, 2019, 15:45 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
Unbelievable batting by ben stokes against Australia in ashes 3rd test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+