
முகமது ஷமி அதிரடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று 321 ரன்கள் 7 விக்கெட் என்ற ஸ்கோடன் விளையாடியது. 66 ரன்கள் எடுத்து இருந்த ஜடேஜா மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து இந்திய அணி விரைவில் ஆட்டம் இழந்து விடும் என எதிர்பார்த்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முகமது சமி கடும் ஷாக் கொடுத்தார்.அதிரடியாக விளையாடிய முகமது சமி மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரிகள் அடித்து 47 பந்துகளை எதிர் கொண்டு 37 ரன்கள் சேர்த்தார்.

சாதனை முறியடிப்பு
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை எட்டியது. இதில் என்ன சாதனை இருக்கிறது முதலில் அதை சொல்லுங்க அப்படி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதோ அடுத்தது அது தான். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முகமது சமி முன்னேறி இருக்கிறார். அதாவது விராட் கோலி இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 சிக்சர்கள் தான் அடித்திருக்கிறார். தற்போது முகமது சமி அவரை முந்தி 25 சிக்ஸர் அடித்துள்ளார்.

கோலியை முந்தியவர்கள்
இவ்வளவு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி டெஸ்டில் வெறும் 24 சிக்சர் தான் அடித்திருக்கிறாரா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த பட்டியலில் விராட் கோலிக்கு முன்பாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் உங்களுக்கு மேலும் ஆச்சரியம் ஏற்படும். எப்போதும் மெதுவாக விளையாடக்கூடிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 26 சிக்சர்கள் அடித்து இருக்கிறார். இதேபோன்று ஜாகீர் கான் 28 சிக்ஸரும், மாயங் அகர்வால் 28 சிக்ஸரும், முரளி விஜய் 33 சிக்சரும் அடித்திருக்கிறார்கள் .

டாப் 10 இந்திய வீரர்கள்
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக் 90 சிக்சர்களும், மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களும், சச்சின் டெண்டுல்கர் 69 சிக்சர்களும் ரோகித் ஷர்மா 66 சிக்சர்களும் , கபில்தேவ் 61 சிக்சர்களும் கங்குலி 57 சிக்சர்களும் ரிஷப் பந்த் 55 சிக்சர்களும், ஜடேஜா 55 சிக்சர்களும், 6 ஹர்பஜன்சிங் 42 சிக்சர்களும் , ரகானே 34 சிக்சரும் அடித்திருக்கிறார்கள்.இந்த பட்டியலில் விராட் கோலி ஏன் இவ்வளவு குறைவான இடத்தில் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

ஏன் குறைவு
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அளவிற்கு பவுண்டரிகளையும் ரன்களை ஓடியும் எடுக்கிறார் என்பதை காட்டுகிறதுஇந்த நிலையில் விராட் கோலிக்கு நாம் இப்படி ஒரு ரெக்கார்டில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம் என்று தெரிந்தால் கண்டிப்பாக அடுத்த பத்து ஆட்டங்களில் அதையும் முறையடித்து மேலே வந்து விடுவார். எனவே யாராவது விராட் கோலிக்கு இந்த சாதனை பட்டியலை அனுப்பி வையுங்கள்.


Click it and Unblock the Notifications