
அக்டோபர் 2 முதல்
தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. முதலில் டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

3 டுவென்டி 20 போட்டிகள் - 5 ஒருநாள் போட்டிகள்
மொத்தம் 3 டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதேபோல இரு அணிகளுக்கும் இடையே 5 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடும்.

அணிகள் அறிவிப்பு
இந்தத் தொடருக்கான இந்திய அணிகள் இன்று அறிவிக்கப்பட்டன. தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான குழுவினர் இன்று பெங்களூரில் கூடி அணியை அறிவித்தனர்.

கர்நாடகத்தின் எஸ்.அரவிந்த்
இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் எஸ். அரவிந்த் டுவென்டி 20 போட்டிகளில் ஆடும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், குர்கீரத் சிங்குக்கு 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா ஏ அணியில் ஆடியவர்கள்
இருவரும் இந்தியா ஏ அணியில் ஆடி தங்களது திறமையை நிரூபித்ததன் மூலம் இந்திய அணிக்குள் வந்துள்ளனர். குறிப்பாக குர்கீரத் சிங் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் நல்ல சுழற்பந்து வீச்சாளராகவும் அசத்தியவர்.

ஜடேஜா நீக்கம்
இந்திய அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். ரொம்ப காலமாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் இவர் என்பது நினைவிருக்கலாம். சமீப காலமாக ஜடேஜா ஓரம் கட்டப்பட்டு வருகிறார்.

டுவென்டி 20 அணி
டுவென்டி 20 அணி விவரம்: கேப்டன் டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஜிங்கியா ரஹானே, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, ஆர். அஸ்வின், அக்ஷார் படேல், ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா, அமீத் மிஸ்ரா, எஸ்.அரவிந்த்.

3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி
கேப்டன் டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜிங்கியா ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, ஆர்.அஸ்வின், அக்ஷார் படேல், குர்கீரத் சிங் மான், அமீத் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ்.


Click it and Unblock the Notifications











