ஆஸ்திரேலியாவை ஓட விட்ட U-19 இந்திய கிரிக்கெட் அணி.. தொடரை வென்று சாதனை.. இளம் வீரர்கள் அபாரம்
பாண்டிச்சேரி : 19 வயதுக்கு உட்பட்டவருக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அணிகளை தயார் செய்ய இதுபோன்ற தொடர்கள் நடத்தப்படும். அது மட்டுமல்லாமல் அடுத்த இளம் வீரர்களை அடையாளம் காண இந்தத் தொடர் பயன்படும்.
இந்த நிலையில் 19 வயது உட்பட்டதற்கான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பாண்டிச்சேரியில் நடைபெறும் இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அண்டர் 19 அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். தொடக்க வீரர் ரிலீ கிங்செல் 15 ரன்களிலும், அலெக்ஸ் லீ யங் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஆலிவர் பீக் 15 ரன்கள் எடுக்க ஜாக் கர்டைன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக ஆடிசன் ஷெரிஃப் 39 ரன்களும், கிறிஸ்டியன் ஹவ் 28 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி 49.3 ஓவர்கள் எல்லாம் 176 ரன்களில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சு தரப்பில் சமத் நாகராஜ் முகமது ஈனான் மற்றும் கிரண் சோமுலே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அண்டர் 19 அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ருத்ரா பட்டேல் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷகில் பராக் மற்றும் அபிக்யான் குண்டு ஆகியோர் பொறுப்புடன் ஜோடி சேர்ந்து பிரமாதமாக விளையாடினர்.
இதில் குறிப்பாக தொடக்க வீரராக களம் இறங்கிய சகில் பராக் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார். 5 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் விளாசிய அவர் 75 பந்துகள் எல்லாம் 109 ரன்கள் குவித்து அசத்தினர். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 145 என்று அளவில் இருந்தது. அபிக்யான் 50 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க இந்திய அண்டர் 19 அணி 22 ஓவரில் எல்லாம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அண்டர் 19 அணி ஒன்றுக்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications