Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Under 19 WC Final-இந்தியா,பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. இது மட்டும் நடந்தால் போதும்..பதிலடி தந்துவிடலாம்

Under 19 World cup : ஐசிசி 19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒன்பதாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் விளையாடி வரும் இந்திய அணி முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Under 19 WC Final - India might have chance to facing Pakistan or australia in finals

இதன் மூலம் இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத ஒரு அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் அண்டர் 19 உலககோப்பை தொடரில் சந்திக்கும். ஆனால் அதற்கு இரண்டாவது அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்.

இரு அணிகளுமே அண்டர் 19 கிரிக்கெட் அளவில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருவேளை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கடந்த 2006 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் அடைந்த தோல்விக்கு தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு பழித் தீர்க்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.

ரோகித் சர்மா, பியூஸ் சாவ்லா,புஜாரா போன்ற நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அதுவும் இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான். ஏனென்றால் சீனியர் உலகக்கோப்பை தொடர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதில் இறுதிப் போட்டியில் நமது இந்திய அணி ஆஸ்திரேலிய விடும் தோல்வியை தழுவியது.

இதற்கு பழித் தீர்க்கும் விதமாக ஜூனியர் வீரர்களை வைத்து பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனினும் இந்தியா ஆஸ்திரேலியாவை விட இந்தியா பாகிஸ்தான் அணி மோதினால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இதனால் இந்தியாவை சந்திக்க போகும் அந்த இரண்டாவது அணி எது என்பதற்கான விடை வியாழக்கிழமை தெரியவரும்.

Story first published: Wednesday, February 7, 2024, 8:01 [IST]
Other articles published on Feb 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+