2 கையாலும் எழுதினால் அது "வைரஸ்".. இரண்டு கையாலும் பவுலிங் செய்தால் அது மெண்டிஸ்!
டெல்லி: நண்பன் படத்தில் சத்யராஜ் இரண்டு கையாலும் மட மடவென எழுதி அசத்துவார். இப்போது இலங்கையில் ஒரு கிரிக்கெட் வீரர் இரண்டு கையாலும் பந்து வீசி அசத்தி வருகிறார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இலங்கை சுழற்பந்து வீச்சாளரான கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பவுலிங் செய்து அனைவரையும் அசத்தினார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றது. ஆனால் கமிந்து அனைவரது மனங்களையும் வென்று விட்டார்.

புதுமாதிரி பந்து வீச்சு
இதுவரை எங்குமே இப்படிப்பட்ட பந்து வீச்சைப் பார்த்திருக்க முடியாது. அப்படி எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான பந்து வீச்சாக மெண்டிஸ் பந்து வீச்சு அமைந்தது.

17 வயது
கமிந்துவுக்கு 17 வயதாகிறது. வலது கை ஸ்பின் மற்றும் இடது கை ஆர்த்தோடாக்ஸ் பந்து வீச்சு மூலம் அனைவரையும் அசத்தினார் இவர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த இரு வகை பந்து வீச்சையும் அவர் மாறி மாறி நிகழ்த்தியதால் பாகிஸ்தான் வீரர்களே குழம்பிப் போய் விட்டனர்.

அரிதிலும் அரிது
இப்படி பந்து வீசுவது, அதுவும் இவ்வளவு இளம் வயதில் வீசுவது அரிதிலும் அரிது. இதுவரை சர்வதேச போட்டிகளில் இப்படிப்பட்ட பந்து வீச்சை யாரும் கொடுத்ததில்லை என்பதால் கமிந்து வரலாற்றில் இடம் பெற்று விட்டார்.
நம்ம ஊரிலும் ஒரு கமிந்து!
அதேசமயம், இந்தியாவிலும் இப்படிப்பட்ட வீரர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் அக்ஷய் கர்னேவார். விதர்பா அணிக்காக ஆடி வருகிறார். அவரும் சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டிராபி டுவென்டி 20 தொடரில் இதுபோல அசத்தினார்.

இவர் பேட்ஸ்மேன்
ஆனால் இவர் பேட்ஸ்மேன் ஆவார். வலது கை மற்றும் இடது கை பேட்டிங்கை ஒரே போட்டியில் செய்து பந்து வீச்சாளர்களைத் திணறடித்தார். இவருக்குப் பந்து வீசுவதில் பிரபலமான பந்து வீச்சாளர்களான இர்பான் பதான், ஹர்டிக் பாண்ட்யா ஆகியோரே திணறினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுபோன்ற திறமையாளர்கள் நிறைய வர வேண்டும்... அப்போதுதான் கிரிக்கெட் போட்டியில் சுவாரஸ்யமும் கூடும்.


Click it and Unblock the Notifications