Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Under-19 உலகக் கோப்பை 2026: கவனிக்க வேண்டிய ஐந்து சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்கள்

ஹராரே: ஆடவருக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. குரூப் பி பிரிவில் இந்தியா (5 முறை சாம்பியன்), வங்கதேசம் (2 முறை வென்ற), நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நான்கு அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் களமிறங்கும் ஐந்து கவனிக்க வேண்டிய வீரர்களைப் பற்றி இங்கு காணலாம்.

இந்தியாவின் திறமையான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது 14 வயதிலேயே ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகை அதிரவைத்தார். இளைஞர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இவர் பல சாதனைகளை முறியடித்துள்ளார். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 59 பந்துகளில் அதிவேகமாக 150 ரன்கள், இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச இளைஞர் ஒருநாள் ஸ்கோர் (95 பந்துகளில் 171), மற்றும் டி20 போட்டிகளில் ஆறாவது அதிவேக சதம் எனப் பல மைல்கற்களை எட்டியுள்ளார். தனது முதல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டனும், மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேனுமான ஆயுஷ் மஹாத்ரே, ஏற்கனவே மூத்த கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். கடந்த சீசனில், ரஞ்சி டிராபியில் தனது மூன்றாவது போட்டியிலேயே முதல் தர சதத்தை அடித்து அசத்தினார். விஜய் ஹசாரே டிராபியில் 117 பந்துகளில் 181 ரன்கள் எடுத்ததுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் அறிமுகத்தில் 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்கு முன்னதாக, சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பைக்காக அடுத்தடுத்து சதங்கள் அடித்து தனது சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தினார்.

வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் அஜிசுல் ஹக்கீம், தனது நாடு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்ற ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அணியை வழிநடத்துகிறார். 2024 முதல் இளைஞர் கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த இரு வீரர்களில் இவரும் ஒருவர். 32 போட்டிகளில் 41.03 சராசரியுடன் 1067 ரன்கள் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு சதங்கள் உட்பட) குவித்துள்ளார். பந்துவீச்சில் 4.59 எக்கானமி விகிதத்தில் 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இரண்டு முதல் தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உள்ளது.

நியூசிலாந்தின் ஆர்யன் மான், அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். முதல் தர அறிமுகப் போட்டியில் இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தினார். உள்ளூர் சீசனில் கேன் வில்லியம்சன் உடன் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் ஓய்வறையைப் பகிர்ந்துள்ளார். அறிமுக ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு நான்கு அவுட்களைப் பதிவு செய்தார். சென்னையில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், தனது முதல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் முத்திரை பதிக்கத் தயாராகி வருகிறார்.

அமெரிக்க அணியின் 18 வயது கேப்டன் உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா, அதிரடி பேட்டிங் மற்றும் துல்லியமான சுழற்பந்து வீச்சாளர். 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் அமெரிக்காவின் அதிக ரன் குவித்த வீரர் இவரே. அக்டோபர் 2024 இல் மூத்த அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி நம்பிக்கை கொடுத்தார். ஸ்காட்லாந்திற்கு எதிராக 115/5 நிலையில் களமிறங்கி 63 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். ஜூலை 2025 வெஸ்ட் இண்டீஸ் U-19 ரைசிங் ஸ்டார்ஸ் டோர்னமென்டில், 41.28 சராசரியில் 289 ரன்கள் (பார்படாஸுக்கு எதிராக 124 ரன்கள் உட்பட) அடித்ததோடு, 16.88 சராசரியில் ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Story first published: Monday, January 12, 2026, 15:39 [IST]
Other articles published on Jan 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+