For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல தேர்வாளரா இருங்க.. அப்புறம் நீங்களே மேட்ச் ஆடுங்க.. பீகார் கிரிக்கெட் கூத்து

பாட்னா : பீகார் கிரிக்கெட் அணி பல ஆண்டுகள் கழித்து பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

அப்படி விஜய் ஹசாரே தொடரில் அந்த அணி ஆட உள்ளது. அந்த பீகார் அணியில் அண்டர்-23 அணிக்கு தேர்வாளராக இருந்த ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பீகார் சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்பது மேலும் புயலைக் கிளப்பி உள்ளது.

இந்த விவகாரம் வெளியே வந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் சப்பை கட்டு கட்டி சமாளித்து வருகிறார்கள்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

விஜய் ஹசாரே தொடருக்கான பீகார் மாநில கிரிக்கெட் அணியில் 28 வயதாகும் ஆசிஷ் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் இவர் அணியில் இருப்பது எந்த தவறும் இல்லை. ஆனால், இவர் கடந்த சில மாதங்கள் முன்பு 23 வயதுக்கு உட்பட்டோர் அணியை தேர்வு செய்தார். அப்படி தேர்வாளராக இருந்த ஒருவர் எப்படி அணியில் வீரராகவும் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவர் பீகார் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி தான் உள்ளே நுழைந்துள்ளார் என்ற காரணமும் கூறப்படுகிறது.

விதிகள் என்ன?

விதிகள் என்ன?

பிசிசிஐ விதிகள் படி ஒருவரின் மகன் பிசிசிஐ-க்கு உட்பட்ட கிரிக்கெட் அணியில் ஆடினால், அவரது தந்தை, உறவினர் ஆகியோர் தேர்வாளராக பணியாற்றக் கூடாது. இந்த விதி இருப்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கூட சச்சின் மகன் அர்ஜுன், பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் அணிகளில் ஆடி வருவதால், அவர் பிசிசிஐ கமிட்டி ஒன்றில் பதவி நீட்டிப்பு கேட்க மாட்டார் என்ற தகவல் வந்தது. ஆனால், ஒரு தேர்வாளரே, அணியில் ஆடினால்? இது பற்றி என்ன விதிகள் உள்ளது என தெரியவில்லை. ஆனால், பிசிசிஐ நிச்சயம் இந்த விஷயத்தில் தலையிடும் என தெரிகிறது.

ஆசிஷ் சொல்வது என்ன?

ஆசிஷ் சொல்வது என்ன?

இது பற்றி பேசிய ஆசிஷ் என்ற அந்த தேர்வாளர் - வீரர், "நான் தேர்வாளராக பணியாற்றினேன். ஆனால், அந்த பதவியில் இருந்து விலகிவிட்டேன். அந்த பணிக்கு அலுவலக ரீதியாக எந்த பணியாணைக் கடிதமும் அனுப்பப்படவில்லை. பீகார் கிரிக்கெட் போர்டு கேட்டதால் அந்த வேலையை செய்தேன். நான் ஏற்கனவே ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய போதும் என் தந்தை சட்டமன்ற உறுப்பினராக தான் இருந்தார். நான் இன்னும் கிளப் கிரிக்கெட் ஆடி வருகிறேன்" என முடித்தார். ஜார்கண்ட் அணிக்காக இவர் ஒரே ஒரு ராஞ்சி போட்டியில் 2010இல் ஆடி உள்ளார். அதில் 16 மற்றும் 12 ரன்கள் எடுத்துள்ளார்.

பீகார் கிரிக்கெட் சமாளிப்பு

பீகார் கிரிக்கெட் சமாளிப்பு

இது பற்றி விளக்கமளித்த பீகார் கிரிக்கெட் போர்டு தலைவர் கோபால் போரா, "அது ஒரு தற்காலிக தேர்வுக் குழு. ஆசிஷ் அதில் இருந்தார். பீகார் அணி 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் ஆட வருவதால் எங்களுக்கு அனுபவ வீரர்கள் தேவைப்படுகிறார்கள். ஆசிஷ் ராஞ்சி தொடரில் ஆடிய அனுபவம் உள்ளவர். மூத்த வீரர். எனவே, அவரை எடுத்துள்ளோம்" என கூறினார்.

ஆசிஷ் உடைய ஒரே ஒரு ராஞ்சி போட்டி அனுபவம் பீகார் அணிக்கு ரொம்ப உதவியாத்தான் இருக்கும்.. அட போங்கப்பா...

Story first published: Friday, September 14, 2018, 16:19 [IST]
Other articles published on Sep 14, 2018
English summary
Under-23 team selector in Bihar senior Ranji team and he is son of MLA
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+