Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Under 19 WC Final - இந்தியா - ஆஸி.ஃபைனல் துவங்கும் நேரம்.. எந்த சேனல்? எந்த app-இல் பார்ப்பது?

மும்பை : அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வரும் நாளை (பிப்ரவரி 11) மோத உள்ளன. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டி என இரண்டு முறை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

அந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றதால் தற்போது இந்திய இளம் வீரர்கள், ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியை வென்று சீனியர் அணியின் தோல்விக்கு பழி தீர்ப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Under U19 World Cup Final : India vs Australia match timing, telecast channel, streaming app details

இந்த முறை இந்திய அண்டர் 19 அணி உதய் சாகரன் தலைமையில் களமிறங்கி உள்ளது. இந்த அணியில் மிடில் ஆர்டரில் சச்சின் தாஸ், முஷீர் கான் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கி இருக்கின்றனர். அதே போல பந்துவீச்சில் சௌமி பாண்டே, அர்ஷின் குல்கர்னி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர். இறுதிப் போட்டிக்கு முன் நடந்த குரூப் சுற்று மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி துவங்கும் நேரம் :

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி பிப்ரவரி 11 (ஞாயிறு) அன்று இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

எந்த சேனலில் பார்க்கலாம்?

2024 அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம்.

மொபைலில் எந்த ஸ்ட்ரீமிங் ஆப்-இல் இலவசமாக பார்க்கலாம்?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்-இல் இலவசமாக காணலாம்.

அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி விவரம் :

அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா, முஷீர் கான், உதய் சாகரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ், சௌமி குமார் பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ஆராத்யா சுக்லா, நமன் திவாரி.

Story first published: Saturday, February 10, 2024, 19:55 [IST]
Other articles published on Feb 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+