Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Under 19 WC: பாகிஸ்தான் செய்த மெகா தவறு.. ஆப்பு வைத்த அம்பயர்.. ஆஸ்திரேலியா வென்ற காரணமே இதுதான்

கேப் டவுன் : அண்டர் 19 உலகக்கோப்பை அரை இறுதியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதும் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணம், கடைசி நேரத்தில் ஓவர் ரேட் குறித்து கவலைப்படாமல் பாகிஸ்தான் செய்த தவறு தான். அதற்காக அம்பயர் விதிப்படி கடைசி ஓவரில் ஃபீல்டிங் பெனால்டி அளித்தார். அதன் காரணமாகவே ஆஸ்திரேலியா கடைசி ஓவரின் முதல் பந்தில் எளிதாக வெற்றி பெற்றது.

அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் முதல் அரை இறுதியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இரண்டாவது அரை இறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதாத நிலையில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

Under U19 World Cup PAK vs AUS : Reason for Pakistan loss against Australia in semi final

ஆனால், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போதும் பிட்ச் கடினமாக இருந்ததால் ரன் குவிக்க திணறியது. பாகிஸ்தான் அணியின் நவீத் அஹ்மத் கான் 10 ஓவருக்கு 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அராபாத் மின்ஹாஸ் 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் 1 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணியின் அலி ராசா மிகச் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார். குறிப்பாக 46வது ஓவரில் அவர் 2 விக்கெட் எடுத்ததுடன் மெய்டன் ஓவராக வீசினார். 46 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்களை இழந்த நிலையில், கடைசி 4 ஓவர்களில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

அப்போது பதற்றமடைந்த பாகிஸ்தான் அணி ஓவர் ரேட்டை தவற விட்டது. அதனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவர் குறைவாக வீசி இருந்தது பாகிஸ்தான் அணி. அதனால், கடைசி ஓவரில் உள்வட்டத்துக்குள் ஒரு ஃபீல்டர் கூடுதலாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், ஃபைன் லெக் பவுண்டரி எல்லை அருகே இருந்த ஃபீல்டரை உள்ளே அழைத்தது பாகிஸ்தான் அணி.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து வென்றது ஆஸ்திரேலியா. ஒருவேளை பாகிஸ்தான் அணி பவுண்டரி அருகே கூடுதல் ஃபீல்டர் நிறுத்தப்பட்டு இருந்தால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்த கூடுதல் வாய்ப்புக்கள் கிடைத்து இருக்கும். அந்த வாய்ப்பை தவற விட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.

Story first published: Friday, February 9, 2024, 11:01 [IST]
Other articles published on Feb 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+