டோணியும், பாக். கேப்டன் மிஸ்பாவும் எப்படி ஒன்றாவார்கள்?.. கேட்கிறார் சானியா வீட்டுக்காரர்!
கராச்சி: டோணி மிகப் பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்குடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமற்றது என்று கூறியுள்ளார் சானியா மிர்ஸாவின் கணவரும், முன்னாள் பாகிஸ்தான் கேப்டனுமான சோயப் மாலிக்.
இருவரையும் ஒப்பிடவே முடியாது. அதிலும் டோணியுடன், மிஸ்பாவை ஒப்பிடவே கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
டோணி பல சாதனைகளைப் புரிந்துள்ளவர். ஆனால் மிஸ்பா என்ன சாதித்துள்ளார் என்றும் மாலிக் கேட்டுள்ளார்.

டோணி - மிஸ்பா
சமீபத்திய தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவையும், இந்திய கேப்டன் டோணியையும் மாற்றக் கோரி எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து கேட்டபோதுதான் இப்படிச் சொன்னார் மாலிக்.

கேப்டனுக்கு இது சகஜமானது
இதுகுறித்து அவர் கூறுகையில் ஒவ்வொரு கேப்டனுக்கும் மோசமான தொடர்கள் அமைவது என்பது வழக்கமானதுதான். அதேசமயம், மிஸ்பா வேறு, டோணி வேறு.

ஒப்பிடுவது தவறு
மிஸ்பாவையும், டோணியையும் ஒப்பிடுவது தவறு. நியாயமற்றது. இருவரையும் ஒப்பிடவே கூடாது.

எத்தனை சாதனைகள்
டோணி பல சாதனைகளைப் புரிந்தவர். ஐசிசியின் அனைத்துக் கோப்பகளையும் வென்ற ஒர சாதனையாளர் ஆவார். ஆனால் மிஸ்பா என்ன செய்துள்ளார்....

நல்லாதான் விளையாடுகிறார் மிஸ்பா
மிஸ்பா நல்ல கேப்டன்தான், நல்ல வீரராக அவர் திகழ்கிறார். இருப்பினும் 2015 உலகக் கோப்பைக்கு வேறு கேப்டனை தேர்வு செய்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து.

இப்பவே மாத்திருங்க
இப்போதே புதிய கேப்டனை அடையாளம் காண வேண்டும். மிஸ்பா உலகக் கோப்பைத் தொடரில் ஒரு வீரராகத் தொடரலாம் என்றார் அவர்.

ஓரம் கட்டப்பட்ட மாலிக்
சோயப் மாலிக் வங்கதேசத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின்னர் ஓரம் கட்டப்பட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் அதிக ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார்.

உலகக் கோப்பையில் விளையாட ஆர்வம்
எல்லோரையும் போலவே நானும் உலகக் கோப்பைத் தொடரில் ஆட ஆர்வமாக உள்ளேன். அது அனைத்து வீரர்களின் கனவாகும் என்றும் கூறியுள்ளார் சோயப் மாலிக்.


Click it and Unblock the Notifications