
நம்பிய ரசிகர்கள்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் அதனை சரி செய்வார்கள் என நினைத்தோம். ஏனென்றால் 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலியின் தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை இந்தியா வெல்லப்போகிறது என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருந்தனர்.

சாதகமான சூழல்
பின்னர் அந்த தொடர் அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் ரசிகர்களின் நம்பிக்கையில் மட்டும் மாற்றமே ஏற்படவில்லை. இந்திய அணியின் அசுரத்தனமான ஃபார்ம், ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்றதன் மூலம் வீரர்களுக்கு இருந்த அனுபவம் என பல்வேறு விஷயங்கள் இந்தியாவின் பக்கம் சாய்ந்திருந்தன.

மாற்றப்பட்ட வரலாறு
இப்படிபட்ட இந்த பெரும் கனவுகளை, ஒரே நாளில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தின் முன் அடகு வைத்தனர் இந்திய வீரர்கள். பரம எதிரிகளான பாகிஸ்தானை தங்களது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்டது. இதில் டாஸில் தோல்வியடைந்த விராட் கோலிக்கு முன்கூட்டியே முடிவும் தெரிந்திருந்தது போல.. ஏனென்றால் அவரின் கண்களில் இருந்த பதற்றங்கள் அனைத்து வீரர்களின் கண்களிலும், செயல்பாடுகளிலும் தென்பட்டன.

காரணம் என்ன
இதன் விளைவு, சாஹீன் அஃப்ரிடி எனும் இளம் வேகப்பந்துவீச்சாளரிடம் இந்திய டாப் ஆர்டர் சரண் அடைந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் இந்திய வீரர்களுக்கு பெரிதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய காரணங்கள்
அதிகப்படியான எதிர்பார்ப்புகளால் வந்த பதற்றம், அனுபவங்கள் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி வீழ்ந்தது. அதுவும் டி20 போட்டியில் இந்திய அணி முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த போட்டியில் தொடங்கிய பதற்றங்கள், இந்திய அணியை டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு கூட செல்ல விடவில்லை.
Recommended Video

கேப்டன்கள் மாற்றம்
இதனால் டி20 கேப்டன்சி மட்டுமின்றி ஒருநாள் கேப்டன் பதவிகளும் கோலியிடம் இருந்து பறிபோனது. புதிதாக வந்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications