Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த கேப்டனாகும் இஷான் கிஷான்?? வித்தியாசமான புள்ளிவிவரத்தால் கொண்டாடும் ரசிகர்கள் - என்ன காரணம்?

சட்டாகிராம்: வங்கதேச அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷான் அடித்த இரட்டை சதத்தால் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி இன்று சட்டாகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா, அதற்கெல்லாம் சேர்த்து வைத்து 3வது போட்டியில் பதிலடி கொடுத்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. இந்த இமாலய ஸ்கோருக்கு முக்கிய காரணம் இளம் வீரர் இஷான் கிஷான் காட்டிய அதிரடி தான்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

ரோகித் சர்மாவுக்கு பதிலாக இன்று விளையாடிய இஷான் கிஷான் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். வங்கதேச பவுலிங்கை நாளாபுறமும் சிதறடித்த அவர், 85 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போதும் அவரின் ஆட்டம் அடங்கவில்லை. வெறும் 126 பந்துகளில் 210 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

அடுத்த கேப்டனா?

அடுத்த கேப்டனா?

இந்நிலையில் இந்த இரட்டை சதத்தால் இஷான் கிஷானை அடுத்த இந்திய கேப்டனாகவே நியமிக்கும் அளவிற்கு ஒரு புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு கடைசியாக கேப்டனாக இருந்த 4 வீரர்கள் 183 ரன்கள் அல்லது அதற்கும் மேல் அடித்தவர்களாக தான் இருந்தனர். சவுரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் 183 ரன்களை அடித்திருந்தனர்.

இஷானின் சாதனை

இஷானின் சாதனை

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக தற்போது இஷான் கிஷானும் 183 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளதால், அவரும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அதனை தாமதிக்காமல் தற்போதே செய்ய வேண்டும் என்றும் பிசிசிஐ-யிடம் கோரி வருகின்றனர்.

கேப்டன்சியில் அனுபவம்

கேப்டன்சியில் அனுபவம்

24 வயதாகும் இஷான் கிஷானுக்கு கேப்டன்சி என்பது புதிதல்ல. கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியை இஷான் கிஷான் தான் வழிநடத்தினார். பல வெற்றிகளும் அவரின் கேப்டன்சியில் வந்தன. எனவே கோலியை போன்றே இஷான் அவதாரம் எடுப்பார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இது நடக்குமா ? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, December 10, 2022, 18:53 [IST]
Other articles published on Dec 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+