Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுனிவர்சல் பிராடுடன், யுனிவர்சல் பாஸ்..! கெயிலை கழுவி, கழுவி ஊத்திய நெட்டிசன்கள்..!

லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில், வங்கி கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையாவுடன் காணப்பட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கழுவி ஊற்றுகின்றனர்.

இங்கிலாந்து உலக கோப்பை தொடரின் லீக் சுற்றோடு மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியது. இந்த நிலையில் யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பார்த்து பொங்கி தள்ளிவிட்டனர். அவர் ஒரு திருடன், வங்கி பணத்தை கடன் வாங்கி மோசடி செய்தவர், லண்டனில் தலைமறைவாக இருப்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கெயில் நீ பெயில்

அந்த பதிவை பார்த்த ஒருவர் யுனிவர்சல் பாஸ், யுனிவர்சல் திருடனுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொருவர் மல்லையாவுடன் சேர்ந்தால், கெயில் பெயிலாகி விடுவார் என்று விமர்சித்திருக்கிறார்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு

மற்றொருவரோ, மல்லையாவின் நட்பை கட் செய்துவிடுங்கள்... அவர் தர வேண்டிய 9,000 கோடி ரூபாயை கேளுங்கள் என்று டுவீட்டியிருக்கிறார். இவரை போல பலரும், கெயிலையும், மல்லையாவையும் கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.

மல்லையா பதிவு

அதில் கோபமடைந்த விஜய் மல்லையா தமது பதிலையும் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது: என்னை திருடன் என்று சொல்வதற்கு முன் உங்களது வங்கிக்கு சென்று உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வங்கிகள் மறுப்பு

வங்கிகள் மறுப்பு

கடன் வாங்கிய பணத்தை 100 சதவீதம் திருப்பி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ஆனால், நான் சொல்வதை வங்கிகள் ஏற்றுக்கொள்ளாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

9,000 கோடி ரூபாய்

9,000 கோடி ரூபாய்

ஐபிஎல் போட்டிகளில் கிறிஸ் கெயில் தொடக்கத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் விஜய் மல்லையா. அவர், இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த புகாரில் சிக்கி, தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

பொதுமக்களின் குரல்

பொதுமக்களின் குரல்

அவரை மீண்டும் இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவை பொதுவெளியில் பார்க்கும் இந்தியர்கள் பலரும் அவரை திருடன் என்று அழைக்கின்றனர்.

Story first published: Sunday, July 14, 2019, 23:16 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+