அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் யுனிவர்ஸ் பாஸ்... அபுதாபி டி10ல் பங்கேற்பு.. கலக்கறீங்க பாஸ்!
அபுதாபி : அடுத்தடுத்து ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் டி20 தொடர்களில் பங்கேற்று கலக்கி வருகிறார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில்.
தற்போது இவர் பங்கேற்க இருப்பது அபுதாபி டி10. கடந்த ஆண்டு இந்த தொடரில் பங்கேற்காத இவர், தற்போது 2021 சீசனில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அபுதாபி அணி இதன்மூலம் தங்களது அணி பலம்பெறும் என்று கூறியுள்ளது.

ஜனவரி 28ல் துவக்கம்
யூஏஇயின் டி10 தொடரின் 4வது சீசன் வரும் ஜனவரி 28ம் தேதி துவங்கி பிப்ரவரி6ம் தேதி வரையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் சிறந்த அணி வீரர்களுடன் இணைந்து மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயிலும் இந்த தொடரில் விளையாடவுள்ளார்.
அபுதாபி அணிக்காக ஆட்டம்
வரும் ஜனவரி 28ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ள டி10 தொடரில் அபுதாபி அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் இடம் பெற்று விளையாடவுள்ளதாகவும் அவர் மூலம் அணி மேலும் பலம்பெறும் என்றும் அபுதாபி அணி தெரிவித்துள்ளது.

மீண்டும் பங்கேற்பு
கடந்த 2018ல் இந்த தொடரில் கேரளா நைட்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டிற்கான சீசனில் பங்கேற்க உள்ளார். ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகளில் விளையாடி உலக அளவில் அந்த வடிவத்தில் தன்னை நிரூபித்துள்ள கெயில் தற்போது மீண்டும் டி10 தொடரில் பங்கேற்கவுள்ளார்.

பலமான அணி
கெயிலுடன் அந்த அணியில் டி20 வடிவத்தின் சிறப்பான வீரர் லூக் ரைட், ஹேடன் வால்ஷ், அவிஷ்கா பெர்னாண்டோ, ரோஹன் முஸ்தபா உள்ளிட்டோரும் இணையவுள்ளனர். கடந்த 2018ல் கேரளா நைட்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய கெயில், 81 ரன்களை 144.64 ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications