Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா தோற்றது சந்தோஷமாம் இந்த வீரருக்கு.. வாயை விட்டுவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்ட முஷ்பிகர்!

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் இந்தியா தோல்வியுற்றது மகிழ்ச்சி தருவதாக டிவிட்டரில் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த முஷ்பிகர் ரஹீம். பின்னர் தனது தேவையற்ற கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகர் ரஹீம். இந்தியாவிடம் லீக் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றுப் போனது வங்கதேசம். அந்த சோகத்திலிருந்து இன்னும் அவர்கள் விடுபடவில்லை போலும்.

நேற்று மும்பையில் நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றதும், அதற்காக மகிழ்ச்சி தெரிவித்து டிவிட் போட்டு சலசலப்பை ஏற்படுத்தினார் ரஹீம். பின்னர் அவர் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

"இதுதாண்டா மகிழ்ச்சி"

இந்தியா தோல்வியைத் தழுவியதும் ரஹீம் தனது டிவிட்டர் பக்கத்தில், இதுதாண் மகிழ்ச்சி.. ஹாஹாஹா.. இந்தியா அரை இறுதியில் தோற்று விட்டது என்று போட்டார்.

டிவி படத்துடன்

டிவி படத்துடன்

இந்த டிவிட்டில் டோணி ஆட்டத்திற்குப் பின்னர் டிவிக்கு அளித்த பேட்டியின் படத்தையும் சேர்த்துப் போட்டு, தனது படத்தையும் கூடவே போட்டு ரொம்பவே மோசமான முறையில் டிவிட்டைப் போட்டிருந்தார் ரஹீம்.

பெரும் சலசலப்பு

கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று கூறி வரும் நிலையில், ரஹீமீன் இந்த டிவிட் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இந்திய ரசிகர்கள் ரஹீமின் டிவிட்டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்கள் குவியத் தொடங்கின.

நீக்கி விட்டார்

இதை எதிர்பாராத ரஹீம் உடனடியாக அநத் டிவிட்டை நீக்கி விட்டார். மேலும் மன்னிப்பும் கேட்டு இன்னொரு டிவிட்டையும் அவர் போட்டார்.

மன்னிச்சிருங்க

அந்த மன்னிப்பில், ஸாரி, நான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் மிகப் பெரிய ரசிகன். இருப்பினும் எனது கடுமையான வார்த்தைகளுக்காக மன்னித்து விடுங்கள் என்று கூறியிருந்தார் ரஹீம்.

ரெய்னாவிடம் குட்டு வாங்கியவர்

ரெய்னாவிடம் குட்டு வாங்கியவர்

இந்தியா, வங்கதேசம் போட்டியின்போது, ஆட்டம் முடிவதற்கு முன்பே வெற்றிக் கொண்டாட்டம் போட்டு சுரேஷ் ரெய்னாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்தான் இந்த ரஹீம். அப்போட்டியில் ஒரு ரன்னில் இந்தியா வென்றது நினைவிருக்கலாம்.

வங்கதேசத்துக்கு நல்லதல்ல

வங்கதேசத்துக்கு நல்லதல்ல

இதுமாதிரியான poor taste செயல்களில் சமீப காலமாக வங்கதேச வீரர்களும், ரசிகர்களும் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். டோணி தலையை துண்டிப்பது போல படம் போட்டு முன்பு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இந்திய வீரர்களை அதிக அளவில் டீஸ் செய்தும் வருகின்றனர். தலை கால் புரியாமல் இப்படிச் செய்கிறார்களா அல்லது இப்படிச் செய்தால்தான் எதிரணியினர் பயப்படுவார்கள் என்று கருதுகிறார்களா என்றும் தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இதுபோன்ற செயல்கள், வளரும் அணியான வங்கதேசத்திற்குக் கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்துத் தரும் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.

Story first published: Friday, April 1, 2016, 11:52 [IST]
Other articles published on Apr 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+