Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங், தோனி வரும் முன் இந்திய அணி எப்படி இருந்தது தெரியுமா? ஷாக் கொடுத்த பாக். வீரர்!

இஸ்லாமாபாத் : இந்திய அணியின் தற்போதைய நிலை பற்றி பேசிய சோயப் அக்தர் 1998இல் பாகிஸ்தான் அணி, இந்தியா வந்த போது என்ன இந்திய அணி என்ன நிலைமையில் இருந்தது என கூறி உள்ளார்.

Recommended Video

Shoaib Akhtar reveals how Yuvraj, Dhoni changed Indian team

யுவராஜ் சிங், தோனி வந்த பின் தான் இந்திய அணி அந்த பிரச்சனையில் இருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

தற்போது அணியில் யுவராஜ் சிங், தோனி இல்லாத நிலையில் மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கி இருப்பதாக கூறி இருக்கிறார்.

மோசமான நிலை

மோசமான நிலை

1998இல் பாகிஸ்தான் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. அணியில் கங்குலி, டிராவிட், அஜய் ஜடேஜா, முகமது அசாருதீன் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக இருந்தனர்.

சச்சின் இல்லை

சச்சின் இல்லை

அந்த தொடரில் சச்சின் பங்கேற்கவில்லை. கேப்டன் அசாருதீன் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனால் இந்திய அணி பலவீனமாக இருந்தது. சச்சின், அசாருதீன் ஆடி இருந்தாலும் கூட இந்திய அணியில் டாப் ஆர்டர் மட்டுமே வலுவாக இருந்திருக்கும்.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

சேவாக், வினோத் காம்ப்ளி, சடகோபன் ரமேஷ் என பல வீரர்கள் அந்த தொடரில் ஒரீரு போட்டிகளில் மட்டும் ஆடினர். யாரும் தங்களை நிரூபிக்கும் ஆட்டத்தை ஆடவில்லை. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதைத் தான் குறிப்பிட்டு பேசி உள்ளார் அக்தர்.

யுவராஜ் சிங், தோனி வருகை

யுவராஜ் சிங், தோனி வருகை

அதன் பின் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பினிஷராக யுவராஜ் சிங் வந்தார். அவரைத் தொடர்ந்து தோனி வந்தார். இவர்கள் இருவரும் வரும் வரை இந்திய அணியில் பினிஷர் என யாருமே இல்லை என்பதை சுட்டிக் காட்டினார் அக்தர்.

டாப்பில் உள்ளது இந்தியா

டாப்பில் உள்ளது இந்தியா

தற்போது உள்ள இந்திய அணி சிறந்த அணியாக உள்ளது. தொடர்களை வெல்வது ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் உச்சத்தில் இருப்பதும் முக்கியம். அந்த வகையில் இப்போதுள்ள அணி எப்போதும் டாப்பில் உள்ளது என குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் சோயப் அக்தர்.

முதல் நான்கு வீரர்கள்

முதல் நான்கு வீரர்கள்

அதே சமயம், ஐசிசி தொடர்களை அவர்கள் வெல்ல வேண்டும் என்பதும் முக்கியம் தான். இப்போதுள்ள அணியில் முதல் நான்கு வீரர்கள் ரன் எடுத்தால் வெல்கிறார்கள். அவர்கள் ரன் எடுக்காவிட்டால் அது பிரச்சனையாக மாறுகிறது என குறைபாட்டை சுட்டிக் காட்டினார்.

இந்திய அணியை பிரித்து மேயலாம்

இந்திய அணியை பிரித்து மேயலாம்

இப்போதுள்ள அணிக்கு யுவராஜ் சிங் அல்லது தோனி போல மேட்ச்சை வென்று கொடுக்கும் மேட்ச் வின்னர்கள் தேவை. 1998இல் நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் டாப் ஆர்டரை வீழ்த்திய உடன், இந்திய அணியை பிரித்து மேயலாம் என நினைப்போம் என அப்போதைய சூழலை சுட்டிக் காட்டினார்.

மேட்ச் வின்னரே இல்லை

மேட்ச் வின்னரே இல்லை

யுவராஜ் சிங் வரும் வரை இந்திய அணியில் மேட்ச் வின்னரே இல்லை. அவரை தொடர்ந்து தோனி வந்தார். அதன் பின், நாம் போட்டி முடிவுகள் மாறுவதை கண்டோம். இப்போது உள்ள பிரச்சனை பினிஷர் இல்லாதது தான் என சுட்டிக் காட்டினார் சோயப் அக்தர்.

யுவராஜ், தோனி அணியில் இல்லை

யுவராஜ், தோனி அணியில் இல்லை

2000மாவது ஆண்டு முதல் 2019 வரை அணியில் யுவராஜ் சிங் அல்லது தோனி இடம் பெற்று இருந்தனர். யுவராஜ் சிங் 2017 முதல் இந்திய அணியில் இடம் பெறவில்லை. தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

அடுத்த பினிஷர் யார்?

அடுத்த பினிஷர் யார்?

இந்திய அணி விரைவாக இவர்களுக்கு இணையான ஒரு பினிஷரை அடையாளம் காண வேண்டும். அதைத் தான் சுட்டிக் காட்டி இருக்கிறார் சோயப் அக்தர். விராட் கோலி இதை பற்றி என்ன திட்டம் வைத்துள்ளார்? யார் அந்த பினிஷர்? காலம் தான் சொல்ல வேண்டும்.

Story first published: Monday, April 13, 2020, 21:46 [IST]
Other articles published on Apr 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+