Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்ட்-க்கு ரெஸ்ட்.. பாக். வீரரிடம் திரும்பிய ஊர்வசி ரவுத்தேலா.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கிண்டல்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் குறித்து பதிவுகளை போட்டு சீண்டி வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா தற்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷாவின் பக்கம் திரும்பியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ரிஷப் பண்ட்- ஊர்வசி ரவுத்தேலா ஆகியோருக்கு இடையேயான பிரச்சினை குறித்து தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக சண்டையிட்டுக்கொண்டனர்.

ரிஷப் பண்ட் தன்னை காதலித்ததாகவும், தனக்காக நீண்ட நேரம் ஓட்டலில் காத்துக்கொண்டிருந்ததாக ஊர்வசி கூறியிருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் இதனை முற்றிலுமா மறுத்தார்.

என்ன சண்டை

என்ன சண்டை

விளம்பரத்திற்காக ஊர்வசி கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு பதில் தர முடியாது என்றும் பண்ட் தடாலடியாக கூறிவிட்டார். எனினும் அவரை சமூக வலைதளங்கள் மூலம் ஊர்வசி ரவுத்தேலா சீண்டிக்கொண்டே தான் இருந்தார். இறுதியில் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியானவுடன் அவர் குறித்த பதிவுகளை குறைத்துவிட்டார்.

நசீம் ஷாவுக்காக பதிவு

நசீம் ஷாவுக்காக பதிவு

இந்நிலையில் பண்ட்-க்கு அடுத்தபடியாக ஊர்வசியின் கவனம் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா பக்கம் திரும்பியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் ஊர்வசியின் இன்ஸ்டா பதிவு தான். பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பாகிஸ்தானில் இருக்கும் அவருக்காக இந்தியாவில் இருந்து ஊர்வசி பிறந்தநாள் வாழ்த்தை கூறினார். அதுவும் அவரது பிறந்தநாளுக்கு 3 மணி நேரம் முன்பாகவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கவுரவ டிஎஸ்பி பதவி

கவுரவ டிஎஸ்பி பதவி

இதுமட்டுமல்லாமல் 10 நாட்களுக்கு முன்னதாக நசீம் ஷாவுக்கு கவுரவ டிஎஸ்பி பதவி கொடுக்கப்பட்டது. இதனையும் நன்கு தெரிந்துவைத்திருந்த அவர், அதற்கும் சேர்த்து வாழ்த்து கூறி உள்ளார். இந்த பதிவுக்கு சரியாக ஒரு நாள் கழித்து நசீம் ஷாவும் வெளிப்படையாக நன்றி ஊர்வசி என பதில் கொடுத்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு கவனித்து வருவது தெரியவருகிறது.

பண்ட் டிஸ்சார்ஜ்

பண்ட் டிஸ்சார்ஜ்

இது ஒருபுறம் இருக்க ரிஷப் பண்ட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ள அவர் வீட்டில் ஒருவரின் உதவியோடு நடப்பதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் சற்று நன்றாக நடக்கத்தொடங்கியவுடன் மற்றொரு அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, February 16, 2023, 19:10 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+