Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 ஆண்டு கால சோகம் முடிந்தது.. அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வெரெவ் சாதனை

நியூயார்க்: நியூயார்க்கில் நடைபெற்ற 2026 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் இளம் நட்சத்திரம் பென் ஷெல்டனை வீழ்த்தி ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் தனது முதல் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில், 23 வயதான அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை எதிர்கொண்டார் ஸ்வெரெவ். 4 செட்கள் வரை நீடித்த இந்த மோதலில், ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரெவ் 6-3, 7-6, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

US Open 2026 Men Final Alexander Zverev Ends 6-Year Wait to Win US Open 2026 Men s Singles Title

இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 7-6 என கைப்பற்றினார் ஸ்வெரெவ். 3-வது செட்டை 7-5 என வென்று பதிலடி கொடுத்தார் பென் ஷெல்டன். ஆனால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 4-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரெவ், அடுத்தடுத்து பிரேக் பாயிண்ட்டுகளைப் பெற்று 6-2 என எளிதாக செட்டைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீமிடம் கோப்பையை நழுவவிட்ட ஸ்வெரெவ், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மைதானத்தில் பட்டம் வென்று தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார். மேலும், சுமார் 37 ஆண்டுகள் கழித்து அமெரிக்க ஓபன் வென்ற முதல் ஜெர்மனி வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக 1989-ல் ஜெர்மனி வீரர் போரிஸ் பெக்கர் அமெரிக்க ஓபனை வென்று இருந்தார்.

கடந்த 2003-ல் அமெரிக்க வீரர் ஆண்டி ரோடிக் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதற்குப் பிறகு வேறு எந்த அமெரிக்க வீரரும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லவில்லை. அந்த வகையில் 23 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற சாதனையைப் படைக்க துடித்த பென் ஷெல்டன் ஏமாற்றம் அடைந்தார்.

" width="200" height="113">

"கோப்பை இல்லாட்டியும் நாங்கதான் சாம்பியன்".. நக்வி குறித்து பிசிசிஐ முடிவு.. இந்திய கோச் விளக்கம்

2026 கிராண்ட்ஸ்லாம் சீசனில் பிரெஞ்சு ஓபனைத் தொடர்ந்து 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஸ்வெரெவ், தனது கேரியரின் 26-வது பட்டத்தை வென்றுள்ளார். பென் ஷெல்டனுக்கு எதிராக விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஸ்வெரெவ், டாப் 10 வீரர்களுக்கு எதிராகப் பதிவு செய்த 60-வது வெற்றி இதுவாகும்.

Story first published: Monday, September 14, 2026, 6:46 [IST]
Other articles published on Sep 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+