Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன்.. அல்காரஸுக்கு அதிர்ச்சி.. ரைபாகினா நம்பர் 1 இடம்.. அரையிறுதிக்கு கோகோ காஃப் தகுதி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 2026 அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டங்களில் பெரும் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் பென் ஷெல்டன் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 5 செட்கள் கொண்ட இந்த மாரத்தான் ஆட்டம் அதிகாலை 3:33 மணி வரை நீடித்தது. இந்த தோல்வியால் அல்காராஸ்-இன் 18 கிராண்ட்ஸ்லாம் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், கஜகஸ்தானின் எலினா ரைபாகினா காலிறுதியில் சீனாவின் ஜெங் சின்வென்னை எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த போதிலும் அதிரடியாக மீண்டு வந்த ரைபாகினா 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம், கடந்த 99 வாரங்களாக முதலிடத்தில் நீடித்த அரினா சபலென்காவை பின்னுக்குத் தள்ளி, மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற சாதனையை செய்தார் ரைபாகினா.

US Open Quarter Final 2026 Elena Rybakina Dethrones Sabalenka for World No 1 Title Carlos Alcaraz Lost

மற்றொரு பரபரப்பான பெண்கள் காலிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை கோகோ காஃப், ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவாவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் செட்டை இழந்த கோகோ காஃப், இரண்டாவது செட்டில் 2 மேட்ச் பாயிண்ட்டுகளை காப்பாற்றி அபாரமாக ஆட்டத்திற்குள் திரும்பினார். இறுதியில் 2-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் மிரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி கோகோ காஃப் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அமெரிக்க ஓபன்.. நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி.. ஒசாகாவை வீழ்த்தி ரைபாகினா வெற்றி

அமெரிக்க ஓபன்.. நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி.. ஒசாகாவை வீழ்த்தி ரைபாகினா வெற்றி

இதனை அடுத்து வரவிருக்கும் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், உலகின் புதிய நம்பர் 1 வீராங்கனையான எலினா ரைபாகினாவை எதிர்த்து அமெரிக்காவின் கோகோ காஃப் பலப்பரீட்சை நடத்த உள்ளார். உலகின் டாப் வீராங்கனைகள் மோதும் இந்த மோதல் சர்வதேச டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, September 10, 2026, 7:53 [IST]
Other articles published on Sep 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+