Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

USA vs NED: மாஸ் காட்டிய அமெரிக்கா.. கிரிக்கெட்டிலும் சாதிக்கிறாங்க.. நெதர்லாந்தை வீழ்த்தி சாதனை

சென்னை: டி20 உலக கோப்பை 2026 தொடரில் நெதர்லாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு வந்த இந்த வெற்றி அமெரிக்க அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்திர் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த அமெரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதில் சாய்தேஜா முக்கமல்லா 51 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். ஷுபம் ரஞ்சனே 24 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, அமெரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். நெதர்லாந்து 8 ஓவர்களுக்குள் 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 15.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முகமது மோஷின் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் ஷாட்லி வான் ஷால்விக் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்மீத் சிங், ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி அமெரிக்காவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 2022-ல் (புலவாய்வோ), 2024-ல் (உட்ரெக்ட்), மற்றும் 2024-ல் (தி ஹேக்) நடந்த மூன்று டி20 மோதல்களிலும் நெதர்லாந்திடம் அமெரிக்கா தோல்வியுற்றிருந்தது. நான்காவது சந்திப்பில் நெதர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்கா முதல் வெற்றியைப் பெற்றது.

ஆட்டத்தின் கடைசி விக்கெட்டாக, ஷாட்லி வான் ஷால்விக் வீசிய பந்தில் ஃப்ரெட் கிளாசெனை மிலின்ட் குமார் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் அமெரிக்க அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி தனது வெற்றியை உறுதி செய்தது. ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் 2 வெற்றியுடன் அமெரிக்க அணி 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, நெதர்லாந்த என இரு சின்ன அணிகள் மோதிய போட்டியை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து பார்த்துள்ளனர்.

Story first published: Friday, February 13, 2026, 22:34 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+