For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

PAK vs USA: யார் இந்த மோனன்க் பட்டேல்? பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர்.. அமெரிக்க கேப்டன்

டல்லாஸ் : பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்ட மோனன்க் பட்டேல் குஜராத்தை சேர்ந்தவர் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் அமெரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை டி20 உலகக் கோப்பையில் வீழ்த்தி இருப்பதை இந்திய ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இதில் தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என அமெரிக்க அணி திட்டமிட்டுள்ளது. அந்த அணியை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்ட போதும் அவர்கள் இதுவரை தாங்கள் ஆடிய முதல் இரண்டு குரூப் போட்டிகளையும் வென்று இருக்கிறார்கள்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024


அதிலும் அதிக அனுபவம் கொண்ட, டி20 உலக கோப்பை வென்ற பாகிஸ்தானை குரூப் சுற்றிலேயே வீழ்த்தி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமெரிக்க அணியில் பல இந்திய வம்சாவளி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும் அமெரிக்க அணியின் கேப்டனாக குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மோனன்க் பட்டேல் இருக்கிறார்.

அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இவர் 1993ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அனந்த் என்ற பகுதியில் பிறந்தார். குஜராத் மாநில அண்டர் 16 மற்றும் அண்டர் 18 அணிக்காக விளையாடினார்.

அதன் பின் 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றார், அங்கு கிரீன் கார்டு பெற்று அமெரிக்க குடிமகனாக மாறினார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடியேறிய அவர் அமெரிக்க உள்ளூர் கிரிக்கெட் அணியில் விளையாடத் துவங்கினார். பின்னர் அமெரிக்க அணியில் வாய்ப்பு பெற்றார். 2018 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக டி20 அமெரிக்க தகுதிச்சுற்று தொடரில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் ஆறு போட்டிகளில் 208 ரன்கள் குவித்தார். அந்த தொடரிலேயே அதிக ரன் குவித்த வீரராக கவனம் பெற்றார்.

அதன் பின் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் மூன்று தொடரில் உகாண்டா அணிக்கு எதிராக சதம் அடித்தார். அதுவே அமெரிக்க அணியின் முதல் சர்வதேச சதம் ஆகும். அமெரிக்க அணிக்காக முதல் சர்வதேச சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் மோனன்க் பட்டேல். இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு முன் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி கேப்டனாக முத்திரை பதித்தார். அதை தொடர்ந்து உலக கோப்பையின் குரூப் சுற்றில் தங்களின் முதல் போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி இருந்தது அமெரிக்கா. தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி உள்ளது. இதை அடுத்து அமெரிக்க அணியின் கேப்டன் மோனன்க் பட்டேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Story first published: Friday, June 7, 2024, 11:10 [IST]
Other articles published on Jun 7, 2024
English summary
USA vs PAK T20 World Cup 2024: Who is Monank Patel? The USA captain who beat Pakistan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+