இப்ப தான் அவர் கூல் கேப்டன் தோனி… ஆனா ஒரு காலத்தில் தீவிரவாதி..! நண்பர் சொன்ன ருசிகர தகவல்
பீகார்: தோனியை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம் என்று அவருடைய பால்ய கால நண்பர் சத்யபிரகாஷ் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் தல தோனியின் திறமை கிரிக்கெட் உலகம் அறிந்தது. அவரது கேப்டன்சி, விக்கெட் கீப்பிங் இந்த உலகம் கொண்டாடும் அம்சங்களில் ஒன்று.

தோனி, 2000ம் வருடம் பீகார் அணிக்காக விளையாடி போது, அவரின் பால்ய கால நண்பர் சொன்ன விஷயம் தான் இப்போதைக்கு இந்திய கிரிக்கெட் உலகின் டாப் நியூஸ். அந்த காலக்கட்டத்தில் அவருடன் விளையாண்ட வீரர் சத்ய பிரகாஷ். தற்போது கரக்பூர் பிரிமியர் லீக் தொடரில் ஆடி வருகிறார்.
அவர் தோனியைப் பற்றி கூறியிருப்பதாவது: தோனியை தாங்கள் அனைவரும் தீவிரவாதி என்றுதான் அழைப்போம். அப்போதெல்லாம் கிரிக்கெட்டில் தோனி 20 பந்துகளில், 50 ரன்கள் குவிப்பார். நன்றாக அடித்து ஆடுவார்.
யார் என்ன சொன்னாலும் அந்த விவரங்களை தோனி கேட்டுக் கொள்வார். போட்டிகளில் எப்போதாவது தான் அவர் அங்கு கேப்டனாக இருப்பார். ஆரம்பத்தில் இந்தி பேசி கொண்டிருந்தவர், இப்போது சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் என்று கூறினார்.
முன்னதாக, சில நாட்களாக ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, அடுத்தாண்டு அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு பதிலளித்த சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications