ஆஸி. கிரிக்கெட் அணியில் பாக். வம்சவாளி முஸ்லீம் உஸ்மான் காஜா

24 வயதேயாகும் அந்தஇளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.
வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.
இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின்போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார்.
முதல் இரு பந்துகளை ஒன்றை பவுண்டரிக்கும், இன்னொன்றில் 2 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலிய ரசிகர்களையும், போட்டியை நேரில் பார்த்து வரும் அவரது பெற்றோரையும் மகிழ்ச்சிப்படுத்தினார் காஜா.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அதை விட முக்கியமாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆடுவதும் இதுவே முதல் முறையாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications